வெள்ளி, மார்ச் 4

பங்களாதேசின் தோல்விஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் 58 ரன்களுக்குள் சுருண்டது.
அந்த அணியில் அதிக பட்சமாக ஜுனைட் சித்திக் 25 ரன்களும், அஷ்ரபுல் 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்களும் அனைவரும் இரட்டை இலக்கை தாண்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சுலிமான் பென் 4 விக்கெட்களும், ரோச், சேமி ஆகியோர் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
59 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ்   அணி 12,2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

1 கருத்து:

  1. Updated பதிவரா இருக்கிங்க... இப்பதான் மேட்ச் முடிந்தது அதுக்குள்ள பதிவா... வாழ்த்துக்கள்...

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_9535.html

    பதிலளிநீக்கு