சனி, மார்ச் 5

சர்ச்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், சூதாட்ட சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ள இலங்கைவீரர்கள் மஹெல ஜெயவர்த்தன, திலான் சமரவீர ஆகியோர் மீது நெருக்கடிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், உலக கிண்ண போட்டிகள் முடிவடையும் வரை அவர்களுக்கு ஆட்டத்தடை விதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.


அண்மையில் பாகிஸ்த்தானுடனான போட்டியில் மிக குறைவான ஓட்டங்களுடன் இவ்விரு துடுப்பாட்ட வீரர்களும் ஆட்டமிழந்தமைக்கு பின்னணியில் பிரபல வர்த்தக புள்ளியொருவரின் சூதாட்ட ஒப்பந்தமே காரணமென என சிறிலங்கா அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி குற்றம் சாட்டியது.



எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஹெல ஜெயவர்த்தன, முற்றிலும் பொய்யான செய்தியை கட்டவிழ்த்துவிட்ட குறித்த தேசிய ஊடகம் மீது வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், ஜெயவர்த்தன, திலான் இருவரும் ஆட்டநிர்ணய சதியில் உண்மையிலேயே தொடர்புடையவர்களா என ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்க முடிவெடுக்குமாயின், உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு அவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.



அண்மையில் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின் பின் அம்மைதானம், இன்னமும் சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்லை என மஹெல ஜெயவர்த்தன பகிரங்கமாக விமர்சித்திருந்ததே, அவர் மீதான கோபத்திற்கும், இக்குற்றச்சாட்டுக்களுக்கும் காரணமென தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக