சனி, மார்ச் 5

இந்தியாவையும் வீழ்த்த முடியும் :
இங்கிலாந்து - அயர்லாந்து இடையே நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இங்கிலாந்தை அயர்லாந்து அதிர்ச்சி தோல்வியடைய செய்தது. அயர்லாந்து வெற்றிக்கு அந்த அணியின் வீரர் ஓபிரையன் முக்கிய காரணமாக இருந்தார்.
அவர் அதிரடியாக ஆடி 113 ரன்கள் குவித்தார். அயர்லாந்து அடுத்த போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது.
இதுபற்றி ஓ பி ரையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இங்கிலாந்தை வெற்றி கொண்ட மகிழ்ச்சி இன்னும் எங்களை விட்டு அகல வில்லை. இதே வெற்றியை இனிவரும் போட்டிகளிலும் பெறவேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். இந்தியாவுடன் மோதும் ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் இந்தியாவையும் எங்களால் வீழ்த்த முடியும். எங்களுடைய பந்துவீச்சும் நன்றாக உள்ளது. இதனால் தான் வங்காளதேசத்தை கட்டுப்படுத்தினோம். இங்கிலாந்தை வீழ்த்தினோம்.
இதே மாதிரி எங்கள் ஆட்டம் தொடர்ந்தால் இந்தியாவுக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். ஷேவாக் போன்ற சில வீரர்கள்தான் எங்களுக்கு பிரச்சினை. தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு உள்ளோம். நாங்கள் கடந்த உலக கோப்பை போட்டியிலும் நன்றாகதான் ஆடினோம். அதேபோல 20 ஓவர் சாம்பியன் போட்டியிலும் சிறப்பாக ஆடினோம். இப்போது எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய அளவுக்கு வலிமையாக மாறி இருக்கிறோம்.
இங்கிலாந்துடன் நடந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற இந்திய ரசிகர்களின் ஆதரவும் முக்கிய காரணமாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போதும் இந்திய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக