திங்கள், மார்ச் 7

முரளி பந்தை வீசி எறிகிறார்
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.

முத்தையா முரளிதரன் பந்தை வீசி எறிவதாக அவர் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் சில உத்தியோகத்தர்களும் முரளீதரன் பந்தை வீசி எறிவதாக கருதுவதாகவும், போட்டிகளில் முரளிதரன் பந்தை வீசி எறிவதாக அறிவிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் முரளிதரன் சில தடவைகள் பந்தை வீசி எறிந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முரளிதரனின் சில பந்துகள் தொடர்பில் இன்னமும் சந்தேகம் நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முரளிதரனின் பந்து வீச்சுப் பாணியில் தவறு இருப்பதாக சில நடுவர்கள் கருதிய போதிலும், பந்தை வீசி எறிவதாக போட்டிகளில் அறிவிக்க அவர்கள் முன்வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முத்தையா முரளிதரன் விவகாரத்தில் சர்வதேச கிரிக்கட் பேரவை கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக