ஞாயிறு, மார்ச் 6

சளைக்காமல் மோதிக்கொண்ட அயர்லாந்து இந்திய அணிகள்இன்று பெங்களூரில் நடைபெற்ற குழு B பங்கு பற்றிய போட்டியில் அயர்லாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின .நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங்க் டோனி அயர்லாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார் .அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவடைய முன்னதாகவே 210 ஓட்டங்களை எடுத்து 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் 29 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில்  வெற்றி கொண்டது .

இன்றைய போட்டி ஆட்ட நாயகனாக 5 விக்கட்டுகளை வீழ்த்திய யுவராஜ் சிங்க் தெரிவு செய்யப்பட்டார்.இவர் ஆட்டம்  இழக்காமல் 50  ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது .
2 கருத்துகள்:

  1. பெயரில்லாமார்ச் 07, 2011

    அயர்லாந்தின் ஆட்டம் அபாரமாய் இருந்தது ................

    பதிலளிநீக்கு
  2. மிக மிக நன்றி சகோதரா..ஆம் மிகவும் அருமையாக இருந்தது ..தங்கள் கருத்துக்களை மேலும் வரவேற்க்கிறேன் .

    பதிலளிநீக்கு