ஞாயிறு, மார்ச் 6

இங்கிலாந்து வெற்றி


தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இங்கிலாந்து தனது அபார பந்துவீச்சால் ஆச்சரிய வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 45.4 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ரன்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்.ஆபிரிக்க அணி ஆரம்பத்தை அதிரடியாகவே தொடக்கியது. அம்லா 42 ஓட்டங்களையும் ஸ்மித் 22 ஓட்டங்களையும் எடுத்தனர். 14.1 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்திருந்த வேளை, முதலாவது விக்கெட்டை அவ் அணி இழந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சரியவே, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ரன்களை மாத்திரமே தெ.ஆபிரிக்க எடுத்துக்கொண்டது.

இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆச்சரிய வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பந்துவீச்சில், ப்ரோட் 4 வ்க்கெட்டுக்களையும் ஆண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இப்போட்டியில் வென்றதன் மூலம் குழு பீ பிரிவில் இங்கிலாந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அவ் அணி விளையாடிய 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றிருப்பதுடன், ஒரு போட்டியில் தோல்வியடைந்தும், மற்றுமொரு போட்டியை சமநிலை கண்டும் மொத்தமாக 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருகிறது.

முறையயே அடுத்தடுத்த இடங்களை மேற்கிந்திய தீவுகள், தெ.ஆபிரிக்கா, இந்தியா, அயர்லாந்து பெற்றுள்ளன. மறுமுனையில்  குழு A பிரிவில் பாகிஸ்த்தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாம் இடத்திலும் நிற்கின்றன.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக