ஞாயிறு, மார்ச் 6

பி‌ட்ட‌ர்ச‌ன் அபார ப‌ந்து ‌வீ‌ச்சு


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளி‌ல் இ‌ன்று நடைபெறு‌ம் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருக்கிறது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

பூவா - தலையா வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். 

ஆனால், தென் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சனை வைத்து பந்து வீச்சை துவக்கினார் கிரேம் ஸ்மித். அதற்கு அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. 

ஆட்டம் துவங்கி 3வது பந்திலேயே இங்கிலாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் விக்கெட்டை வீழ்த்தினார் பீட்டர்சன். ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் ஸ்ட்ராஸ். 

அதன்பிறகு அந்த ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சனையும் வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இழந்தது இங்கிலாந்து அணி. 

அதன்பிறகு களமிறங்கிய பெல் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பீட்டர்சன் பந்தை முன்னால் வந்து ஆட அது மேலேழும்பி வந்தது. அதனை அபாரமாக பாய்ந்து பிடித்து பெல்லையும் வெளியேற்றினார் பீட்டர்சன். 15 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இந்நிலையில் இணை சேர்ந்த டிராட்டும், போபாராவும் நிதானமா நின்றாடி வருகின்றனர். 29வது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. 

பீ‌ட்ட‌ர்ச‌ன் ‌வீ‌சிய 4 ஓவ‌ர்க‌ளி‌ல் 4 ர‌ன்க‌ள் ம‌ட்டுமே கொடு‌த்து 2 மெ‌ய்‌ட‌ன்க‌ள் ‌வீ‌சி, 3 ‌‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


4 கருத்துகள்:

  1. களமுனையிலிருந்து அதிரடி ஸ்கோர், உடனுக்குடன் சூடான பதிவு அருமை. நேற்று பலத்த எதிர்ப்பார்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை, ஆஸ்திரேலியா ஆட்டம் மழை காரணமாக ஏமாற்றி விட்டது. இலங்கை அணியினர் மழை வரும் எனத் தெரிந்தே துடுப்பாட்டத்தை தாம் முதலில் ஆரம்பித்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று இந்தியா- அயர்லாந்து, தெ. ஆபிரிக்கா, இங்கிலாந்து கொஞ்சம் சூடாகத் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக நன்றி சகோதரா கருண் ..

    பதிலளிநீக்கு
  3. மிக மிக நன்றி சகோதரா நிரூபன் ....hehehe

    பதிலளிநீக்கு