செவ்வாய், மார்ச் 29

இதுவரை இந்தியா - பாகிஸ்தான் ..

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 119 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு நாட்டு அணிகளின் சார்பில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை...


அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்இந்தியா- 356-9. 
2005 , ஏப்ரல் 5ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.பாகிஸ்தான் - 344-8.2004 மார்ச் 13ம் தேதி கராச்சியில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.மிகவும் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர்

இந்தியா - 79

சியால்கோட்டில் 1978ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி நடந்த இப்போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

பாகிஸ்தான் - 87

ஷார்ஜாவில் 1985ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானை 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்

பாகிஸ்தான் - 322 

மொஹாலியில் 2007ல் நடந்த போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

இந்தியா - 316

1998ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில்
வீழ்த்தியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக