செவ்வாய், மார்ச் 29

யுவராஜ்சிங்குடன் காதலா ??உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது, அப்போது யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கிரிக்கெட் ஆட்டத்தில் எனக்கு நெருக்கடி வரும் போது ஒருவரை ஞாபகப்படுத்துவேன். உடனே உற்சாகம் கிளம்பும்.

அவர் யார் என்பதை இறுதியில் சொல்கிறேன் என்றார். யுவராஜ்சிங் ஞாபகத்தில் வருபவர் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் தீபிகா படுகோனே என்று மும்பை பத்திரிகைகள் கிசுகிசு வெளியிட்டுள்ளன. அவரை மனதில் வைத்து தான் யுவராஜ்சிங் பேசியதாக கூறப்பட்டது.

இதுபற்றி தீபிகா படுகோனாவிடம் கேட்டபோது அவர்மனம்திறந்து கூறியதாவது:-

யுவராஜ்சிங் எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேசி பல நாட்கள் ஆகி விட்டது. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிக்காக அவர் போராடி வருகிறார். அவரையும் என்னையும் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. எங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஞாபகத்தில் வருபவர் பெற்றோராக இருக்கலாம். அல்லது சச்சின் தெண்டுல்கராக இருக்கலாம்.

நான் ஞாபகத்தில் வரும் அளவுக்கு எங்களுக்குள் பலமான பந்தம் இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்கள் யுவராஜ்சிங் மனிதை காயப்படுத்தும். இதனால் நன்றாக விளையாட முடியாமல் போகலாம். இந்திய அணியை ஜெயிக்க வைத்து உலக கோப்பையை அவர் கொண்டு வர வேண்டும். அதை சச்சினுக்கு காணிக்கையாக்க வேண்டும். அதுவே இப்போதைய பிரார்த்தனை. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக