செவ்வாய், ஜூலை 5

ஏமாறாத ஆண்களை விரும்பும் பெண்கள்

இப்போதைய இளைஞர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல .இருப்பினும் இன்னும் இளைஞர்களுள் சிலர் ஏமாறுபவர்களாய் இருக்கத்தான் செய்கிறார்கள் .

சில விடயங்களை தர்க்கரீதியாக சிந்தித்து பார்க்காமல் இன்னொருவர் சொல்கிறார் என்பதற்க்காக செய்கின்றார்கள் .அந்த வகையில் ஏமாந்த சில இளைஞர்கள் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் பியர் அருந்தினால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று முட்டாள்த்தனமாக நம்பி இருக்கின்றார்கள் .

ஆனால் பியர் அருந்துபவர்களின் முகங்களை உற்று நோக்கிப் பார்த்தால் பியர் அருந்துவது எவ்வளவு அசௌகரியம் ஆனது எவ்வளவு அசௌகரியமான விடயம் என்பதை புரிந்து கொள்ளலாம் .

கசப்பு , நாற்றம் , எரிவு , குமட்டல் போன்றவற்றுடன் சில வேளைகளில் வாந்தி எடுக்கவும் இவர்களுக்கே நேரிடுகின்றது .இவ்வளவு அசௌகரியங்களையும் தாங்கி கொண்டு தொடர்தேர்ச்சியாக பியர் அருந்தினால் முகம் வீங்கி தொந்தி விழுந்து எந்நேரமும் எரிச்சலுடனும் அனைத்து மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களிலும் பியர் அருந்தாவிட்டால் அங்கு மகிழ்ச்ச்சியாக இருக்க முடியாத ஒரு நிலையையும் இவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள் .

பாவம் சில இளைஞர்கள் அருந்தும் போதும் அசௌகரியமாக இருக்கும் அருந்தியதன் பின் பாதிப்புக்கள் ஏற்பட கூடியதுமான பியருக்கு தங்களின் அறியாமையால் தாங்களே ஏமாறுகிறார்கள் . இதை அறிந்த பெண்கள் இந்த விடயத்துக்கே ஏமாறும் இந்த ஆண்கள் எல்லாம் வாழ்க்கையில் கூட எல்லா விடயங்களுக்கும் ஏமாறுபவர்கள் தான் என்ற உண்மையை புரிந்து கொண்டு ஏமாறாத ஆண்களை விரும்புவதிலேயே திடமாக உள்ளனர் .

என்னவெல்லாம் சிந்திக்கிறோம் ...கொஞ்சம் இதையும் சிந்திக்கலாமே...

2 கருத்துகள்:

  1. ம்ம் அருமை நண்பரே..! விழிப்புணர்வான தகவல் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி சகோதரா..தங்கள் கருத்தை வரவேற்கிறேன் ..

    பதிலளிநீக்கு