வியாழன், ஜூலை 7

இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதில் கவலையில்லை:விமலாராமன்

"ராமன் தேடிய சீதை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமலாராமன்.
தமிழில் வாய்ப்புகள் இல்லாததால், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
அஜித்தின் "பில்லா-2", விக்ரம் நடிக்கும் "கரிகாலன்" ஆகிய படங்களில் இரண்டாவது ஹீரோயினாக விமலாராமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"பில்லா-2" வில் முதல் ஹீரோயினாக மும்பை மாடல் ஹீமா குரோசியும், "கரிகாலன்" படத்தில் முதல் ஹீரோயினாக கேரள மாடல் ஒருவரும் நடிக்கிறார்கள்.
இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது குறித்து விமலாராமனிடம் கேட்டால், தமிழ் பட தொடக்க வாய்ப்புகளுக்குப் பின், ஸ்டார் படங்களை எதிர்பார்த்தேன்  கிடைக்கவில்லை.
அதனால் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தினேன். அங்கு ஓரளவுக்கு ஸ்டார் படங்கள் கிடைத்தன. ஆனால் நான் தமிழில்தான் ஸ்டார் படங்களை எதிர்பார்த்தேன்.
இப்போது "பில்லா 2" மற்றும் "கரிகாலன்" படத்தின் மூலம் அது நிறைவேறியிருக்கிறது. இரண்டாவது ஹீரோயினாகத்தான் நடிக்கிறேன் என்பது குறித்து கவலைப்படவில்லை. என் கேரக்டருக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என்றார் விமலாராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக