செவ்வாய், ஜூலை 12

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் தமன்னா

இலங்கையில் நடைபெறவுள்ள தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்பதா?, வேண்டாமா? என்ற தடுமாற்றத்தில் நடிகை தமன்னா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழில் ‘வேங்கை’ படத்திற்கு பிறகு புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத தமன்னா, தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் தமன்னா அளித்துள்ள பேட்டியொன்றில், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தெலுங்குப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற உள்ளது. அங்குள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்துகின்றனர்.

இதற்காக நான் இலங்கை செல்லவுள்ளேன், என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை தமன்னா இலங்கை செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இலங்கைக்கு தமிழ் நடிகையான தமன்னா போகக் கூடாது, அப்படி சென்றால் அவர் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வரக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல வேறு சிலரும் தமன்னாவிடம் எச்சரித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் தமன்னா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக