வெள்ளி, ஏப்ரல் 8

பழையன கழிதலும்... புதியன புகுதலும் ...


இனித்திடும் மங்களகரமான இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் மலர்ந்திடும் இனிய ஆண்டில் சில உண்மைகளையும் விளங்கி கொள்ளலாமே .

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டே தான் இருப்பார்கள் .இனியும் நாம் ஏமாறுபவர்கள் இல்லை என்பதை ஏமாற்றுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .இனித்திடும் செய்திகள் புது வருடத்தில் பிறக்க கசப்பான ஏமாற்றங்களை  நாம் தவிர்த்துக்கொள்வோம் .

அடடா ..உண்மைகள்  எங்கே என்று சிந்திப்பது தெரிகிறது..ம்ம்ம்ம் தொடர்வோம் ...

புதிதாக ஒன்றும் அல்ல .எல்லாமே நாம் அறிந்தது தாங்க .

நமது நாட்டில் தமிழ் பேசுபவர் குறைந்த அளவில் இருந்தாலும் நம் நாட்டில் திரைப்பட ரசிகர்கள் புகழாத நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை என்றுதான் கூறலாம் .நாம்
அவர்களை புகழ்வதற்க்கு காரணங்கள் பல உண்டு .அவர்களின் செயற்பாடுகள் நடிப்புகள் திரைக்கு முன் எம்மை கவர்வதுதான் இதன் பிரதான காரணம் .அழகான ஆடைகள் உடுத்தி  அவர்கள் வரும் அழகு அனைவரையும் பிரமிக்க வைப்பது உண்மையே .இதனால் அவர்களின் நடை உடை பாவனைகளை நம் இளைஜர்கள் நாகரிகம் என்ற போர்வையில் தாமும் பின்பற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே .

இந்த நுணுக்கங்கள்  தான் இன்று பெரும் பெரும் கம்பனிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளன .
அப்படிப்பட்ட வியாபர நிறுவனங்கள் ஆனது திரைப்படங்களின் ஊடாக தமது உற்பத்தி பொருட்களை விளம்பரப்படுத்துவதட்க்காக திரைப்படங்களுக்கு அனுசரணை  வழங்குவது இயல்பானதே . காரணம் இயக்குனர்களுக்கு அனுசரணை இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் ஆகும் .திரைப்படங்களை அவதானமாக பார்த்தால் அனுசரணை வழங்கிய கம்பனிகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணம்
ஒரு குறிப்பிட்ட மோட்டார் வாகன கம்பனியானது ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திட்க்கு அனுசரணை வழங்குமாயின் அந்த திரைப்படத்தில்    நடிகர் அடிக்கடி அக் கம்பனியின் மோட்டார் வாகனத்தில்  தான் அதிகம்  பயணம்   செய்வார்.

அதே போன்று தான் அதிகமான தமிழ்த் திரைப்படங்களை  பார்க்கும் போது சிகரட் கம்பனி அதிக அளவில் அனுசரணை வழங்கி இருப்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும் .

சிகரட் கம்பனியானது எம்மை ஏமாற்றி புகைக்க தூண்டுவதட்க்கு அதிகமாக தமிழ்த் திரைப்படங்களை  நாடுவது ஏன்??
* அதிகமானவர்கள் திரைப்படங்களை பார்ப்பதனால் ...
* இளைஜர்கள்   நடிகர்களின்  Style இனை பின்பற்றுவதில் முனைப்பாக இருப்பதாலும் ...
* முடியுமான அளவு ஊதி ஊதி பெருதாக காட்ட  முடியும் என்பதாலும் ...
* சிறுவர்கள் திரைப்படங்களில் காண்பிக்கபடுபவை உண்மையானது என நம்புவதாலும் ...
* நடிகர்கள் எதையும் மறைமுகமாக விளம்பரப்படுத்தும் ஆற்றல் கொண்டு உள்ளதாலும் ...

இவற்றை சாதகமாக பயன்படுத்தி கொண்டு சிகரட் கம்பனியானது எங்களை ஏமாற்றி புகைக்க தூண்டுகின்றது .
ஏனைய உற்பத்தி பொருட்களை விளம்பரபடுத்துவது இலகு .ஆனால் சிகரட் இனை விளம்பரப்படுத்த சிகரட் கம்பனியானது பாரிய சிக்கல்களை எதிர் நோக்க வேண்டும் .ஏனெனில் ஏனைய பொருட்களில் நாம் எதோ ஒரு வகையில் பயனை பெறுகிறோம் அதே வேளை சிகரட் புகைப்பதனால் எந்த வித பயனும் கிடைக்காத அதே நேரம் பாதிப்பே அதில் நிறைந்து காணப்படுகிறது .

 நிஜ  வாழ்வில் ஒருவர் சிகரட் புகைப்பவராயின் அவரது உதடு கறுத்து பற்களில் கறை படிந்து கண்கள் கலங்கி சிவந்து முகங்களில் சுக்கங்கள் விழுந்து இளமையிலேயே முதுமைத்தோற்றத்தைஅடைந்து வாயில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டும் எந்த நேரமும் பதட்டத்தோடும் அதே நேரம் சோர்ந்தவராகவும் இருப்பார் .ஆனால் திரைப்படங்களில் சிகரட் புகைக்கும் நடிகர்கள் அந்தமாதிரியா இருக்கிறார்கள் ...??????


ஆம் ..சிந்திக்க தெரிந்தவன் தான் மனிதன்..இவை ஏதும் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை  அல்ல.ஏனெனில் நாம் தினமும் நடைமுறையில் இவற்றை காண்கிறோம் ..மேலும் இங்கே ஒரு முக்கிய விடயமாக இந்தமாதிரியான விளம்பரங்களை மேட்க்கொள்ளுபவர்களோ  இவற்றில்  இருந்து தங்களை காப்பாற்றி கொள்கிறார்கள்  என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் . ஏனெனில் திரைக்கு                                            
முன்னால் காட்டப்படும் இந்த விளம்பரங்கள் வெறும் பணத்துக்ககாவே  ஆனால் அவர்கள் திரைகள் மூடியதும் அவற்றில் இருந்து வெளிவந்து விடுவார்கள் .ஆனால் இதனை பார்க்கும் எம் இளம் சமுதாயம் மட்டும் அதுதான் உண்மை என்று நம்பி தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள் .இதனால்த்தான் சொல்வது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று . 


    பழையன  களைந்து  புதியன புகுந்து  நம் சிந்தனைகளுக்கு மெருகூட்டி 
உண்மைகளை விளங்கி  கொண்டு   புத்தாண்டை குதூகலமாக்குவோம்.

அனைவருக்கும் தித்திக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

3 கருத்துகள்:

 1. சிந்தனை மலர வைத்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
  என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
  என் உயிரே

  பதிலளிநீக்கு
 3. சிகரெட்
  விரல்களின் இடையே ஒரு விரல் போல,
  சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.

  பதிலளிநீக்கு