வியாழன், ஏப்ரல் 7

சகுனி

'சிறுத்தை' படத்திற்கு பிறகு கார்த்தியின் அடுத்தப்படம் என்ன என்பதில் ஏகப்பட குழப்பங்கள். பல கதைகளை கேட்ட கார்த்தி இறுதியாக தேர்ந்தெடுத்திருப்பது புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையை. 'சகுனி' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை சங்கர் தயாள் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் எழில், எஸ்.டி.சபாபதி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிவர். இப்படத்திற்கு இசை: ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, கலை: ராஜீவன், படத்தொகுப்பு: ஆண்டனி. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. சபாசு..! உருட்டுங்க ஒங்க தாயக்கட்டைய........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக