புதன், மார்ச் 30

இலங்கையும் இந்தியாவும் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இதுவே முதல் தடவை


இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சச்சின் டெண்டுல்கரும் கௌதம் காம்பீரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பெற்றனர்.
காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்து வீரட் கோலி (9) யுவராஜ் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தழந்தனர்.
டெண்டுல்கர் 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களடனும் ஸஹீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 33 ஓடட்ங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முஹமட் ஹாபிஸ் 43 ஓட்டங்களைப் பெற்றார்.
கம்ரன் அக்மல் 19 ஓட்டங்களுடனும் அஸாத் ஷபீக் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
26 ஆவது ஓவரில் அனுபவமிக்க வீரரான யூனிஸ்கான் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் அணி 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
உமர் அக்மல் 24 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மற்றொரு சிரேஷ்ட வீரரான அப்துல் ரஸாக் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
42 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அணித்தலைவர் அவ்ரிடி 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அத்துடன் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு முற்றாக மறைந்தது.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஒரு விக்கெட் கைவசமிருந்தது. ஆனால் அவ்வணி ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றது. ஸஹீர்கான் வீசிய அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் வீரட் கோலியிடம் பிடிகொடுத்து மிஸ்ப உல் ஹக் ஆட்டமிழந்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான், ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், முனாவ் பட்டேல்ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா, இலங்கை ஆகிய இரு அணிகளும் 3 ஆவது தடவையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன. இந்தியா 1983 ஆம் ஆண்டிலும் இலங்கை 1996 ஆம் ஆண்டிலும் சம்பியனாகியிருந்தன.
இலங்கையும் இந்தியாவும் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக