புதன், மார்ச் 9

சிக்கன் தோசை


தோசைகளில் பலவிதம் உண்டு. அதிலும் சிக்கன் தோசைனா... கேட்கவா வேணும்..? இப்பவே எச்சில் ஊற ஆரம்பிக்குமே.. தோசை வார்க்கும் போதே இவ்வளவு அழகா இருந்தா.. சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்டும் சூப்பரோ சூப்பர்! செஞ்சுத்தான் பாருங்களேன்.....!
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீ­ர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.
* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.
* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.

5 கருத்துகள்:

  1. சிக்கன் தோசை...
    சாப்பிட ஆசை.

    பதிலளிநீக்கு
  2. ஹிஹி...நன்றி சகோதரம்..சமைத்து உண்டு மகிழுங்கள் .

    பதிலளிநீக்கு
  3. தோசை மாவை போல புளிக்க வைக்க வேண்டாமா? இந்த ரெசிபி, எனக்கு புதுசா இருக்குது.... அருமையாக இருக்குதே... ட்ரை பண்ணனும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி சித்ரா ..ஆம் தோசை சுட்டதும் சுட சுட எனக்கும் ஒன்று .

    பதிலளிநீக்கு
  5. புதுசாக இருக்கு.அருமை.
    சித்ரா மைதா மாவை புளிக்க வைக்க வேண்டாம்,இந்த தோசை மைதாமாவில் செய்வதால் சுவை அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு