புதன், மார்ச் 9

திருமணத்தின் போது கூறப்படும் ஒரு சில மந்திரங்களின் அர்த்தம்சூரியதேவன் உன்னைக் கைப்பிடித்து இவ்விடமிருந்து உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்லட்டும் . வண்டியினால் இரண்டான அச்வினி தேவதைகள் உன்னை என் வீட்டிற்கு ஏந்திச் செல்லட்டும். 

கன்னியே சோமதேவன் முதலாவதாக உன்னை அடைந்தான். இரண்டாவதாய் கந்தர்வன் உன்னை அடைந்தான். மூன்றாவது பதியாக அக்கினி உனக்கு ஆனான். மனுஸ்ய வர்க்கத்தை சேர்ந்த நான் உனக்கு நான்காவது துனைவனானேன். நானும் என் வீடும் சுகம் பெறும்படி நீ என்னிடம் வருவாயாக .... 

சோமதேவனால் சாந்தியையும், கந்தர்வனால் அழகையும், குரலையும் , அக்கினியால் தனத்தையும்,புத்திர சம்பத்தையும் அனுக்கிரகம் பண்ணப்பட்டிருக்கிற பெண்ணே உன்னை நான் சந்தோசத்துடன் வரவேற்கிறேன்...

ஒரு அடி தூரம் அன்ன இஸ்மிருதியின் பொருட்டு உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

உடல் வலிமையின் பொருட்டு ரெண்டு அடி தூரம் உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

வீரத்தின் பொருட்டு மூன்று அடி தூரம் உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

சுகத்தை தருவதற்கு நான்கடி தூரம் உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

பசுக்களின் வளர்ச்சியை முன்னிட்டு ஐந்து அடி தூரம் உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

ருதுக்களின் பொருட்டு ஆறடி தூரம் உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

ஏழு ரித்விக்குகளின் பொருட்டு ஏழடி தூரம் உன்னை விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும். 

ஏழு அடிகளை தாண்டின நீ எனக்கு தோழியாக வேண்டும்...
ஏழு அடிகளை தாண்டின நாம் சிநேகிதர்களாகி விட்டோம். 
உன்னுடன் சிநேகத்தை அடைகிறேன்...
உன்னுடைய சிநேகதிலிருந்து பிரிக்கப்பட்டவனாக ஆகமாட்டேன். 
என்னுடைய சிநேகத்தில் இருந்து நீயும் போகவேண்டாம். 
நாம் சேர்ந்தவர்களாக ஆவோம். 
இன்ன இன்னவற்றை செய்யவேண்டும் என்று சங்கல்ப்பம் எடுத்து கொள்வோம். 
சேர்ந்து பிரியமுள்ளவர்களாகவும்,நல்ல மனதி உடையவர்களாகவும் உணவையும் பலத்தையும் சேர்ந்தே அனுபவிக்கிறவர்களாகவும் வாழ்வோம். 
நமது எண்ணங்களை பற்றி ஒரே கருத்துடையவர்களாக ஆவோம். 
விரதங்களை சேர்ந்து அனுஸ்டிப்போம்.

ரிக்காக நீ இருக்கிறாய்
ஸாமாவாக நான் இருக்கிறேன்

நான் மேலுலகம் ஆகிறேன்
நீ பூமியாக ஆவாய்

நான் சுக்கிலமாக இருக்கிறேன்
நீ ரேதஸ்வைத் தரிப்பவளாக மாறுவாய்

நான் மனமாகிறேன்
நீ சொல்லாகிறாய்

நான் ஸாமா
நீ ரிக்

நீ ரிக்
நான் ஸாமா

புருசப் பிரஜைகளை அடைவதன் பொருட்டு
திருவின் உருவே. இன்சொல் உடையவளே
என் சகி வருவாயாக 

6 கருத்துகள்:

 1. சேர்ந்து பிரியமுள்ளவர்களாகவும்,நல்ல மனதி உடையவர்களாகவும் உணவையும் பலத்தையும் சேர்ந்தே அனுபவிக்கிறவர்களாகவும் வாழ்வோம்.
  நமது எண்ணங்களை பற்றி ஒரே கருத்துடையவர்களாக ஆவோம்.


  ....lovely. very meaningful. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. இந்த மந்திரங்களின் அர்த்தங்களை பற்றி பலவகையான விவாதங்கள் பல இடங்களிலும் வந்துவிட்டது. ஏன் நானே இதை பல இடங்களில் நண்பர்களிடம் விவாதப்பொருளாக்கியிருக்கிறேன். அதில் எப்போதுமே யாருமே ஒரு உடன் பாட்டிற்கு வந்ததில்லை. இம்மந்திரங்களை எதிர்ப்பவர்களில் (என்னையும் சேர்த்து)பெரும்பாலானோர் பார்ப்பன பாசிச எதிர்ப்புச்சிந்தனை உடையவர்களாகவே இருக்கிறார்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை வேண்டுமென்றே தவராக மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்றோ அல்லது யாரோ மொழிபெயர்த்து சொன்னது, உனக்கு சாமசுகிறதம் தெரியுமா என்ற இந்த எதிர்வாதங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதை ஆங்கலத்தில் defensive arguments என்று தான் சொல்ல வேண்டும். இதில் எவருமே முடிவுக்கு வரமாட்டார்கள்.

  இதை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு. இந்த திருமன முறை இன்றைய காலத்திற்கு ஏற்றதுதானா என்ற கேள்வியை யாருமே கேட்டுக்கொள்வதில்லை. படித்தவரானாலும் படிக்காதவரானாலும் ஏழையானாலும், பனக்காரனானாலும் ஒரு பார்பனரை வைத்து சமஸ்கிறத மந்திரத்தை சொல்லி, தாலி கட்டினால்தான் திருமனம் என்று மூலைக்கு விளங்கிட்டுக்கொண்டுருக்கும் அவலம் தான் இருக்கிறது.
  நம்முடைய திருமனத்தை, நமக்கு அறிமுகமே இல்லாத ஏதோ ஒருவர் வந்து, நமக்கு சம்பந்தமே இல்லாதா ஏதோ ஒரு மொழியில் எதையோ சொல்லி பெண்ணுக்கு மட்டும் ஒரு கயிற்றை கட்டினால் அது திருமனம் என்பதை அறிவு கொண்டு யோசித்தால் கொஞ்சமும் ஒப்புக்கொள்ள முடிகிறதா, பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமை தோழி...மந்திரங்களையும் சுட்டிக்காட்டியிருந்தால் இன்னும் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு