புதன், மார்ச் 9

மீண்டும் யுவராஜ்இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றுமுடிந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய இந்தியா துடுப்பாட்டத்தில் 9 ஓவர்களில் 80 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்த போதும் திடீரென 19 ரன்களுக்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்து சற்றே தடுமாறியது. 


பின்னர் யுவராஜ் சிங் கைகொடுக்க இந்தியா வெற்றி பெற்றது. 189 ரன்களுக்குள் நெதர்லாந்து அணி வீழ்ந்திருந்தது. பின்னர் 36.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. யுவராஜ் சிங் மீண்டும் ஆட்ட நாயகனானர்.

1 கருத்து:

  1. பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணி, இனிவரும் போட்டிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்

    பதிலளிநீக்கு