புதன், மே 25
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை பாவித்துள்ள உபுல் தரங்க

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க அண்மையில் முடிவுற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை பாவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உபுல் தரங்க உலகக் கிண்ண போட்டிகளின்போது இலங்கை அணி சார்பாக சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார்.

நியுஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் முடிவில் நடத்தப்பட்ட சோதனைகளில் இவர் prednisolone என்ற மருந்தைப் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது ஆஸ்த்துமா நோயைக் குணப்படுத்தப் பாவிக்கப்படும் ஒரு வகை மருந்தாகும். 
இது சம்பந்தமாதகக் கருத்து வெளியிட இலங்கையின் தேசிய ஊக்க மருந்துத் தடை அமைப்பின் தலைவர் டொக்டர்.கீதாஞ்சன மெண்டிஸ் மறுத்துவிட்டார்.

தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலச் செயலாளர் நிசாந்த ரணதுங்க இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 
இலங்கை அணி வீரர்கள் பற்றி இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் எழவில்லை என்றும், உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக இது வரை தமக்கு எதுவும் தெரியாது என்றும், இலங்கை கிரிக்கெட்டின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் ஆஷ்லி சில்வாவும் தெரிவித்துள்ளார்

1 கருத்து:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

    Share

    பதிலளிநீக்கு