வியாழன், மே 26

சென்னை அணியின் முக்கிய வீரராக நடிகர் சூர்யா


தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், முக்கிய நட்சத்திர வீரர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ்.

இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தணு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, நிச்சயமாக சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெறும். அதற்கான பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று உரக்க சத்தம் போட்டு உற்சாகமாக சொன்னார்.

அடுத்து பேசிய சரத்குமார், ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்றார்.

மேலும் பேசிய சரத்குமார், திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக