வியாழன், ஜூன் 2

பாரட்ட பட வேண்டியவர் சமீரா

 
பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சமீரா ரெட்டி வற்புறுத்தியுள்ளார். புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களை அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுவாகவே பாலிவுட் நடிகர், நடிகையர்கள் புகைப்பழக்கத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களிலும் ஸ்டைலாக சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுவதும் வாடிக்கை.

ஆனால் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி புகைப்பழக்கம் இல்லாதவர். இவர் தமிழில் அசல், நடுநிசி நாய்கள் படங்களில் நடித்துள்ளார்.

உடற்பயிற்சி

புகைக்கு எதிராக இவர் அளித்துள்ள பேட்டியில் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும், எனக்கு அந்த பழக்கம் இல்லை. கடின உடற்பயிற்சிகள், நல்ல உணவு பழக்க வழக்கங்கள் இருந்தாலே இந்த பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

எனது நண்பர்கள் பலர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கின்றனர். அதை ஒரேயடியாக நிறுத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் உயிரை பறித்துவிடும்.

யோகா, மூச்சை இழுத்து விடும் பயிற்சி போன்றவற்றால் கூட புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்றும் சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக