வெள்ளி, ஜூன் 3

தினசரி 20 சிகரெட்டுக்களை ஊதித் தள்ளும் கர்ப்பிணிப் பெண் கூறும் புதிய தகவல்கள்!கர்ப்பிணிப் பெண்கள் புகைப்பிடிக்கக் கூடாது, அது அவர்களுக்கும் ஆகாது, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூடாது என்பது மருத்துவ ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியான விளக்கமாகும். 

ஆனால் 20 வயதான சார்ளி வில் கொக்ஸ் என்ற இளம் தாய் இதை மறுக்கின்றார். தான் கருவுற்று இருந்தபோது தினசரி 20 சிகரட்டுக்களை ஊதித்தள்ளியதாகவும் அது தனது பிள்ளைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் மாறாக அது குழந்தைக்கு நன்மையையே அளித்தது என்றும் கூறுகின்றார். 

இவர் இந்தக் கருத்தைக் கூறியபோதும் தனது குழந்தையைச் சுமந்தவாறு புகைத்துக் கொண்டிருந்தார். அது தான் பிடிக்கும் 3500வது சிகரெட் என்றும் கூறினார். 

கருவுற்ற நிலையில் அல்லது குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு சிகரட் பிடிப்பது குழந்தைகளுக்குத் தேவையான அளவு ஒட்ஸிஸன் கிடைப்பதைத் தடுத்து விடுகின்றது. 

ஆனால் சார்ளி வில் கொக்ஸ் என்ற இந்த இளம் தாய் இதற்கு முற்றிலும் மாறான கருத்தைக் கூறுகின்றார். புகை பிடிக்கும் போது அதை எதிர்த்துச் செயற்படும் வகையில் குழந்தையின் இருதயம் கடினமாகச் செயற்பட்டு அது குழந்தைகளை மேலும் உறுதியாக்கும் என்று அவர் புது விளக்கம் அளிக்கின்றார். 

இவரின் குழந்தை லிலிக்கு இப்போது 14வாரங்கள். புகை பிடிப்பது எனது உரிமை குழந்தைக்காக எனது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறுகின்றார். 

யார் இந்த சார்லிவில் கொக்ஸ்??

சர்வதேச ரீதியாக சிகரட் புகைப்பதன் பாதிப்புக்கள் பற்றி விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. 

அதிலும் கர்ப்பிணித் தாய் சிகரட் புகைப்பதால் எந்தவித தவறும் செய்யாத கருவில் உள்ள சிசுவும் பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. 

அதாவது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான காரணிகளில் ஒன்றான சுத்தமான காற்றோட்டம் கிடைக்காமல் போகின்றது. அதுமட்டும் இன்றி கருவின் வளர்ச்சி குறைவடைகிறது. 

பிறப்பின் போது நிறை குறைந்த மேலும் மந்த புத்தி உள்ள பிள்ளையாக பிறப்பதற்க்கு சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றன. 

இவ்வாறான பாதிப்புக்கள் இருக்கும் போது சார்லிவில் கொக்ஸ் சிகரட் புகைப்பது ஆரோக்கியமானது என குறிப்பிடுவது சர்வதேசத்தில் உள்ள தலை சிறந்த வைத்தியர்களை மடையர்கள் என சொல்லாமல் சொல்கிறார். 

சார்லிவில் கொக்ஸ் சிகரட் கம்பனிக்கு வக்காளத்து வாங்க நினைக்கும் போது எந்த வைத்தியரும் அவருக்கு ஆபத்து என்பதை புதிதாய் புரிய வைக்க தேவையில்லை. என்பது வெளிப்படையான உண்மை. 

ஏன் என்றால் இவரின் குழந்தை பிறந்து 14 வாரங்கள் என்றாலும் அவரின் சிகரட் புகைக்கும் உரிமையை விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

அப்படி என்றால் அந்த சிறு குழந்தைக்கு சுத்தமான காற்றோட்டத்தை சுவாசிக்க உரிமை இல்லையா? இவர் சிகரட் புகைக்கும் போது பிள்ளையின் உரிமை பாதிக்கப்படுவதில்லையா? 

இப்போது புரிகிறதா இந்த சார்லிவில் கொக்ஸ் யார் என்று? எப்படி இருந்தாலும் சிகரட் புகைப்பதை நல்லது என நிரூபிக்க முனைவது ஏதாவது தூண்டுதலின் பேரில் என்பது வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். 

இல்லை என்றால் 3500 என்ற கணக்கை திட்டவட்டமாக குறிப்பிடுவதில் இருந்து புரிந்து கொள்ள முடியும் . 

குறிப்பு - 

கடந்த புதன்கிழமை எமது இணையத்தில் வெளியான "தினசரி 20 சிகரெட்டுக்களை ஊதித் தள்ளும் கர்ப்பிணிப் பெண் கூறும் புதிய தகவல்கள்!" என்ற குறித்த செய்திக்கு இலங்கையின் மது, புகை தடுப்பு நிறுவனத்திடமிருந்து வெளியான சிகரெட் புகைப்பதன் தீமைகள் குறித்த பதிவே மேலே தரப்படுகின்றது.. 

சமூகப் பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் அனைத்துத் தரப்பிலிருந்தும் வெளியாகும் கருத்துக்களில் பயனுள்ள தகவல்களை வெளியே கொண்டு வருவது எமது கடமையாகும்...

நன்றி : TamilCNN

1 கருத்து:

  1. மிகவும் துல்லியமான பதில். உங்கள் எல்லோரினதும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    Fantastic reply news. If every one do like this, world will change soon.
    Congratulation akka. Do more like this. :))

    பதிலளிநீக்கு