சனி, ஜூன் 4

Supper Singer Unior Stars இன் அட்டகாசமான இசை விருந்து

விஜய் டிவி யில் மக்கள் மனம் கவர்ந்த குட்டி நட்சத்திரங்களின் நிகழ்வை நேரடியாக காணும் ஒரு அரிய சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.மனம் நிறைந்த சந்தோசம் ஒவ்வொரு    நாளும் அந்த குட்டி நட்ச்சத்திரங்களின் தொலைக்காட்சி நிகழ்வை தவற விடுவதில்லை .ஸ்ரீகாந்த் ,ஸ்ரிநிஷா, நித்யஸ்ரீ சரவன் பிரியங்கா ,அல்கா, ரோஷன் என இறுதிவரை Super Singer Unior Stars நிகழ்வில் வந்து கடந்த வருடம் மனதை மகிழ வைத்து சென்று இருந்தார்கள்.ஒரு தடவையேனும் இவர்களின் நிகழ்வை நேரில் காண முடியாதா என நினைத்து கொண்டு இருந்த இலங்கை ரசிகர்களிற்கு  வெற்றியும் வீரகேசரியும் இணைந்து ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருந்தார்கள்.அற்புதமான மனதை மயக்கும் அந்த மாலை வேளையில் ஜில் என்று ஒரு இதமான குளிரில் Super Singer Unior Stars குட்டிகள் ரசிகர்களின்  மனதை மகிழ செய்ய   கதிரேசன்   கோவில்   மண்டபத்திற்கு    விரைந்திருந்தார்கள்   .

ரசிகர்களிற்கு  விருந்தளிக்கும் முகமாக மாலை 6.31 இக்கு ஆரம்பிக்கும் என கூறியிருந்த நிகழ்வுகள் 2,3நிமிடங்கள் தாமதமாகவே ஆரம்பித்திருந்தது.நிகழ்வு ஆரம்பித்து விட்டது என்பதை தெரிவித்து கொள்ளும் முகமாக திரைக்கு பின்னால்  இருந்து ஒரு தேன் மதுர குரல் மனதை வருடும் விதமாக காற்றில் தவழ்ந்து வர  அனைவரிலும் ஒரு எதிர்பார்ப்பு .அது தாங்க  இந்த குரலின் சொந்தக்காரர் யார் ??என்பதுதான் .யாரும் இல்லைங்க.. காலை வேளை மனதுக்கு இதமான பாடல்களுடன் புத்துணர்வு ஊட்டும் விடயங்களை தாங்கி விடியலை கொண்டு வரும் விடியலின் சொந்தக்காரர் தான் தன் தேன் மதுர குரலால் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரங்களின் அறிமுகம் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களின் அறிமுகம் என அறிமுகங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கும் வேளையில் ""' புதிய வானம் புதிய பூமி '"" என உள்ளங்களை கொள்ளை அடிக்கும் ஒரு மழலை குரல் எம் மத்தியில் இருந்து யார் அந்த குட்டி நட்சத்திரம் என்று கண்கள் காணும் முன்பே அவன் அரங்கம் சென்று விட்டான் .குட்டி எம்  ஜி ஆர் போல் அவன் போட்ட நளினங்கள் அவன் பாடலை மேலும் மெருகூட்டியது மட்டும் அன்றி இந்த சிறு வயதில் அவனின் அனுபவம் மிக்க திறமைகளை குன்றில் விளக்கு போல வெளிப்படையாக காட்டியது.சபை நடுவே தோன்றிய ஸ்ரீகாந்த்இன் முகம்  மிகவும் தெளிவான மழலைக்கான அதே சந்தோசங்களுடன் சூரியனை கண்ட தாமரை போல மலர்ந்திருந்தது .இந்த சிறு வயதிலேயே அவன் திறமைகளையும் செய்கைகளையும் நான் மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரும் பாராட்டி  தம் பாராட்டு மழைகளை கைதட்டலாக குவித்தனர்.ஒவ்வொரு  பாடல்களுக்கும் ஒவ்வொரு  வேடம் தாங்கி எம் ஜி ஆர் சிவாஜி ரஜனி என நம்ம கார்த்தி வரை ஒரு கலக்கல் நிகழ்வையே அரங்கேற்றி விட்டான் சபை நடுவே.அது மட்டும் அல்லாது ஒவ்வொரு  தடவையும் அவனது குறும்புத்தனமான பேச்சுக்கள் அவன் ஒரு குழந்தை நட்சத்திரம் என்ற உண்மையை வெளிச்சம் மிட்டு காட்டியது .திடீரென அரங்கில் தோன்றிய அந்த குழந்தை நட்சத்திரம் நிகழ்வை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளரையே Sitdown என்று கூறி விட்டு தானும் உட்கார்ந்து விட்டான்..சில நொடி அமைதியான சபை அவனது ஆச்சரியம் மிக்க அடுத்த பாடல் இற்குகான விளக்கத்தை பார்த்து மெய் சிலிர்த்து நின்றது என்றால் அது பொய் ஆகாது.

அது மட்டும் அல்லாமல் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களின் குழுவினால் அற்புதமான ஒரு அரங்கேற்றம் அரங்கேட்டப்பட்டது.ஆமாங்க குழந்தை நட்ச்சத்திரம் ஸ்ரீகாந்த் இற்க்கு ஒரு குட்டித்தம்பி மூன்றே வயது நிரம்பிய ஸ்ரீசாந்த் தனது மழலை பேச்சால் இல்லை இல்லை மழலை குரலில் அழகான ஒரு பாடலை பாடி அனைவருக்கும் சந்தோசத்தை அள்ளி வழங்கினான் .  '' உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ''என்று அந்த மூன்று வயதிலேயே கூறி விட்டான்.அவனால் முடியும் நிச்சயமாக எதிர்காலத்தில் இன்னொரு ரஹ்மான் இனை அவன் மூலம் நாம் காணலாம்.காண வேண்டும் என்று அவனை இளைஞர் உலகம் மூலம் நாம் வாழ்த்தலாமே. 

இப்படி Uniorகளின் வருகை அரங்கை அலங்கரித்து கொண்டு இருந்தது .அருமையான பழைய பாடல்களை தெய்வ குழந்தைகளை போல தோன்றிய அந்த சிட்டு குருவிகள் தேன் மழையாய் இசை மழை பொழிந்தன .மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என ஆரம்பித்த நிதயஸ்ரீ கான மழை பொழிந்தார் .இவை மட்டும் அல்லாமல் சரவன் பிரியங்கா ஸ்ரிநிஷா என சுட்டிக் குழந்தைகளால்  அழகாக அரங்கேற்றபட்டுக்கொண்டு இருந்தன அவர்களின் அட்டகாசமான இசை விருந்து.

என்ன யோசிக்கிறிங்க ....ஸ்ரீகாந்த் இற்கு  கொடுத்த விளக்கம் மற்றவங்களுக்கு இல்லை என்றா அப்படி இல்லைங்க  அனைத்து குழந்தைகளுமே திறம்பட நிகழ்வை கொண்டு செல்ல 5 வயது குழந்தையாய் Unior Stars இல தோன்றிய குழந்தை நட்ச்சத்திரம் என்ன செய்திருப்பான் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும் தானே . ஒவ்வொருத்தராக நான் விளக்கி சென்றால்  உங்களுக்கும்  சலிப்பு  ஆகிடுமே  .ஏன் எனில் அனைவரின் திறமையும் காற்றலையில் எமது வீடுகளின் தொலைக்காட்சிகளில் நாம் பார்த்து மகிழ்ந்தது தானே..

ம்ம்ம்ம் முக்கியமான ஒரு விடயம் சொல்ல மறந்துட்டேனே .. 

ஆம் பாராட்ட வேண்டிய விடயம் தாங்க ..நிகழ்வை ஒருங்கிணைத்த வெற்றி குழு எம்மால் முடியும் செயற்றிட்டத்தை  மேலும் கொண்டு செல்ல ஒரு பங்களிப்பாக இருக்கட்டுமே  என்று தானே ..ஆம் மிகவும் உண்மையான யதார்த்தத்துடன் கூடிய ஊடகத்தின் பெருமைக்குரிய அந்த செயற்றிட்டம் சில நாட்க்களுக்கு முன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்டது .ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அவர்கள் அதை நிரூபித்து காட்டியமை சிறப்பான ஒரு விடயம் .நல்லது செய்வது அதற்க்கு ஏன் விளம்பரம் என்பது உண்மையாக இருந்தாலும் இவ்வாறு அவர்கள் சொன்னார்களே? அது உண்மைதானா? என்ன செய்கிறார்க்களோ? என்ற கேள்விக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தவறான  ஏனையோரின் கருத்துக்கள் ஏதும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே அதை நிரூபித்து இருப்பார்கள் .ஒருவர் செய்யும் போது விளம்பரம் தேவை இல்லை .கூட்டாக செய்யும் போது அது அனைவருக்கும் தெரிய படுத்தல் முக்கியம் என்பது பொதுவான ஒரு சிந்தனை தான் . அப்பொழுதுதான் எதிர்கால சவால்களை வெல்லலாம் என்பது அனைவரும் அறிந்ததே .இவ்வாறு நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்லும் வெற்றியின் செயற்பாடுகள் பாராட்டப்படவேண்டிய விடயம்.

ம்ம்ம்ம் ....இவ்வாறே இலங்கை ரசிகர்களையும் தம் கையிட்க்குள் உள் வாங்கி  அரங்கமே குழந்தை நட்சத்திரங்களின்  இசைமழையால் நனைய நம் நாட்டு ரசிகர்களும் தம் அன்பின் வெளிப்பாட்டையும் பாராட்டுகளையும் கைதட்டல்களாய் குவித்தனர்.இவ்வாறு இந்திய நட்சத்திரங்களின் குரல்களின் மத்தியில் நம்நாட்டு குரலும் ஓங்கி ஒலித்தமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம். """ என்னடா ஸ்ரீகாந்த் சௌக்கியமா """ என அரங்கில் தோன்றிய நம் நாட்டு கலைஞன் கருணா மிகவும் இனிமையாக பாடிச்சென்றார்.அவரது திறமையும் எதிர்காலத்தில் மென் மேலும் சிறக்க இளைஞர் உலகம் வாயிலாக வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன் .

இவ்வாறு நம் நாடு கலைஞர்களின் திறமைகளும் ஒருங்கிணைப்பு குழுவினர்களால் கொண்டு வரப்பட்டமை பாராட்டுதலுக்கு உரிய ஒரு விடயம் ... .
இப்பிடி சொன்னால சொல்லிட்டே போகலாம் இங்க ...நல்ல விடயங்களுக்கு எப்பவுமே முடிவு இருக்கிறதில்லையே ...இசைமழை தொடர நேரம் நெருங்க குழந்தை நட்ச்சத்திரங்கள் எம்மிடம் இருந்து விடைபெறும் நேரமும் நெருங்கியது .மனதில் சிறு கவலைதான் ...இன்னும் சிறிது நேரம் அவர்கள் இசையில் மகிழ்ந்தால் என்ன என்பது போல......நேரம் ஆச்சே வீட்டுக்கு போகணுமே....

1 கருத்து: