வியாழன், ஜூன் 9

"வகை வகையாய் தமிழில் நடிகைகள்"சுவாரஸ்யமான விஷயங்கள்

ரஜினியின் ராணா படத்தில் முதலில் நாயகியாக தேர்வானவர் சோனாக்ஷி சின்ஹாதான் என்றும், ஆனால் தனது நெருங்கிய நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி என்பதால் ரஜினி இதற்கு உடன்படவில்லை என்றும் இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் ராணா படத்தில் நாயகி தேர்வில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இப்போது வெளியாகத் துவங்கியுள்ளன.

ராணா பட கதாநாயகியாக முதலில் சோனாக்ஷி சின்ஹாவை தேர்வு செய்துள்ளனர். இவர் தபாங் படத்தில் நடித்து பிரபலமானவர். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும், தயாரிப்பாளர்களும் சோனாக்ஷியே இந்தக் கதைக்குப் பொருத்தமானவர் என்று கூறினர். இதையடுத்து அவரிடம் கால்ஷீட் பெறவும் ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் ரஜினி இதற்கு உடன்படவில்லை. சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் ரஜினியும் மிக நெருங்கிய நண்பர்கள். 1986-ல் அஸ்லி நக்லி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அன்று முதல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமானார்கள்.

சத்ருகன் சின்ஹா ஸ்டைலை நான் பின்பற்றுகிறேன் என்று ரஜினி பெருந்தன்மையுடன் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே தனது நெருங்கிய நண்பர் மகளுடன் ஜோடியாக நடிக்க ரஜினி விரும்பவில்லை. இதையடுத்துதான் தீபிகா படுகோனேவை தேர்வு செய்தார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக