வெள்ளி, ஜூன் 24

பாடலாசிரியராக லாரன்ஸ்


நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என்று பன்முகமாக இருந்து வரும் ராகவா லாரன்ஸ் இப்போது புதிதாக பாடல் ஆசிரியராகவும் மாறியிருக்கிறார்.
தமிழில் முனி படத்திற்கு பிறகு லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படம் காஞ்சனா. கற்பனை கலந்து கதாபாத்திரங்களை வைத்து உண்மையான கதை சொல்லும் படமாக வருகிறது காஞ்சனா படம்.

படத்தில் லாரன்ஸ் ஜோடியாக லக்ஷமிராய் நடிக்கிறார். சென்னை, ஐதராபாத், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கும் லாரன்ஸ் நடிப்போடு படத்தின் இயக்கப் பொறுப்பையும் சேர்த்து பார்த்துள்ளார்.

கூடவே காஞ்சனா படத்தின் முதல் பாடலான "நில்லு நில்லு உன் சொந்த காலில் நில்லு" என்று தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

காஞ்சனா படம் முனி படத்தின் பார்ட் 2-ஆக கூட இருக்கலாம் என்றும் கூறும் லாரன்ஸ் இதற்கு அடுத்து பிரபாஸ், அனுஷ்காவை வைத்து தெலுங்கில் ரெபேல் என்ற படத்தை இயக்க உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக