வியாழன், ஜூன் 23

இது காதலிப்பவர்களுக்கு மட்டும்எந்த ஒரு யுவதியும் தன்னுடைய காதலன் அழகானவனாக கொஞ்சம் அறிவானவனாக அன்பானவனாக எந்த நேரமும் தன்னை மகிழ்ச்சியாய் வைத்திருக்க கூடியவனாக இருப்பதையே விரும்புகின்றனர் . 

ஆனால் தற்போது இளைஞர்களுக்கு எவ்வளவு முயற்சித்தாலும் இவையெல்லாம் முடியாமலேயே போகிறது . அது ஏன் தெரியுமா ? சில இளைஞர்கள் அறியாமையின் காரணமாக சிகரட் புகைக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் சிகரட் புகைப்பதனால் உதடு கறுத்து பற்களில் கறை படிந்து கண்கள் சிவந்து கன்னங்களில் குழி விழுந்து இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்தை அடைகின்றனர் .

இவ்வாறு பணம் செலவழித்து அவலட்சணமாகுவது மட்டும் அல்லாமல் அவர்களிடம் நெருங்கமுடியாத அளவு வாய் நாற்றம் வீசுகின்றது .இதனால் காதலர்கள் LipKiss பண்ணுவதும் கூட கொடுமையானதாக மாறி விடுகிறது .

இதனால் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகி விட காதல்களும் தோற்றுப்போகின்றன . இதனை அறிந்து கொண்ட இன்றைய இளம் யுவதிகள் சிகரட் புகைப்பவர்களை காதலிக்க விரும்புவதில்லை என்ற செய்தி ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

ஆடவர்களே ! இன்றிலிருந்து இளம் யுவதிகளின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் மன்மதன் ஆகுவதா ? இல்லாவிட்டால் இன்னும் சிகரட் புகைத்து அவலட்ச்சணமாகி யுவதிகளின் வெறுப்புக்கு ஆளாகுவதா ? 

என்னவெல்லாம் சிந்திக்கிறோம் ...கொஞ்சம் இதையும் சிந்திக்கலாமே ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக