வியாழன், ஜூன் 23

டூப்பின் உடலில் ரஜினியின் தலைரஜினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இன்னும் பதினைந்து நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவித்திருக்கிறார் தனுஷ். ஆனால் இந்த அறிவிப்பு அவ்வளவு உறுதியானதல்ல என்கிறார்கள் திரையுலகத்தில்.


ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததா, இல்லையா என்பது குறித்தே பல தரப்பட்ட செய்திகள் வெளியாகி ரசிகர்களை குழப்பி வருகிறது. எப்படியிருந்தாலும் ரஜினிக்கு தொற்றுநோய் ஆகிவிடாமல் இன்னும் சில மாதங்களுக்காகவாவது பாதுகாக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கண்டிப்பான அறிவுறுத்தல். அவர் சென்னை திரும்பினால், பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் வரிசை கட்டி நிற்பார்கள். ஒரு சிலரை சந்தித்து மற்றவர்களை தவிர்த்தால் அதுவே பெரிய சர்ச்சைக்கு வழி வகுக்கும். எனவே அவரை சிங்கப்பூரிலிருந்து அப்படியே வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம்.

"ராணா" படத்தில் கட்டாயம் நடிப்பேன் என்று ரஜினி அறிக்கை வெளியிட்டிருப்பது ஆறுதலான விடயம். தீபிகா படுகோனேவுடன் அவர் ஆடுவதாக இருந்த முதல் டூயட் காட்சியில் நடிக்க முடியாமல் தான் அவர் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. அதனால் அந்த பாடல் காட்சி முழுவதையுமே ரஜினியை போல உருவ தோற்றமுள்ள ஒருவரை வைத்து எடுத்து முடித்துவிட்டாராம் கே.எஸ்.ரவிக்குமார். அதற்கு காரணம் மீண்டும் செட் போட முடியாது. தீபிகாவின் கால்ஷீட்டும் பிரச்சினையாகும் என்பதால் தான்.

"ஆதவன்" படத்தில் 13 வயது சிறுவனாக சூர்யாவை காட்ட உதவிய தந்திரம் தான் இப்போது ரஜினி விடயத்திலும் பின்பற்றப்பட இருக்கிறதாம். மேற்படி டூப்பின் உடலில் ரஜினியின் தலையை பொருத்துவார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக