வெள்ளி, ஜூன் 24

கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் ரசிகர்கள் முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் -அவன் இவன்


ீ‌ரியஸாவே படமெடுக்கிறீங்களே கொஞ்சம் கமர்ஷியலாவும் எடுங்களேன் என்று பாலுமகேந்திராவுக்கு குடைச்சல் குடுக்க, கொலை வெறியில் ஒரு படத்தை எடுத்தார். படத்தின் பெயர் நீங்கள் கேட்டவை. (நீங்கத்தானடா கேட்டீங்க). இது அவரது சிஷ்யர் பாலாவின் முறை. கொஞ்சம் கடுமையை குறைச்சி காமெடியா பண்ணக் கூடாதா? இதோ எல்லோரும் கேட்ட மாதி‌ி காமெடியா அவன் இவன்.

ஆனாலும் பாலாவுக்கு குசும்பு ஜாஸ்தி. என்னோட சீ‌ரியஸ் படங்களையே சி‌ரிப்பு படமா தர்றேன் என்று நமட்டு சி‌ரிப்போடுதான் திரைக்கதை எழுதியிருப்பார் போலிருக்கிறது. பிதாமகன் சீயானை தட்டி ஒட்டி விஷால் காதாபாத்திரம். சூர்யாவின் சாமர்த்தியத்தை மட்டும் உருவினால் அதுதான் ஆர்யா. நந்தா ரா‌ஜ்கிரணை அப்பாவியாக அசமந்தாக காட்டினால் அவன் இவன் ‌ஜி.எம்.குமார். எது எப்படி இருந்தால் என்ன... கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் ரசிகர்கள் முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற நேரம் திரையங்கு அதிர அதிர சி‌ரிப்பொலி. இப்படியொரு சி‌ரிப்பொலி கேட்டு நாளாச்சு.
கமுதிக்கோட்டை ஜமீனை கள்வர்கள் கோட்டைன்னு சொல்ற அனவுக்கு அது திருடர்களின் ரா‌ஜ்‌ஜியம். போலீஸ் வந்தால் சிக்னல் கொடுப்பதற்கென்றே கட்டி வைத்திருக்கும் காண்டாமணி, கறி சோறு போட்டு, இனி திருட மாட்டேன்னு சத்தியம் வாங்கும் போலீஸ் என்று கதைக்களமே புரையேற்றுகிறது. அண்ணன் விஷால். தம்பி ஆர்யா. ஆனால் இருவருக்கும் இரண்டு அம்மாக்கள். இவர்கள் போட்டுக் கொள்ளும் ஈகோ யுத்தம் இருக்கே... குஞ்சுமணியை புடிச்சி ஒண்ணுக்கு போக தெ‌ரியாதவன் என்று அம்பிகா ஆர்யாவை சதாய்ப்பதும், ஜட்‌ஜ் வண்டியில் வந்திறங்கும் ஆர்யா தனது அம்மாவுடன் ஆட்டம் போட்டு அம்பிகாவை வெறுப்பேற்றுவதுமாக கதற கதற சி‌ரிக்க வைக்கிறார்கள்.
விஷாலுக்கு இது ராஜபாட்டை. புழுதி கிளப்பியிருக்கிறார். பெண் வேடத்தில் அவர் போடும் ஆட்டத்திற்கு திரையரங்கு சேர்ந்தாடுகிறது. என்னா... நளினம். மாறுகண்ணும், உடல் மொழியும் நம்முன் காட்டுவது விஷாலையல்ல, ரத்தமும் சதையுமான வேறொரு மனிதனை. கறி சோறு போடும் இடத்தில் கான்ஸ்டபிள் ஜனனியை பின் தொடர்ந்து வழிவதும், கேப்பையில் நெய் வழியும் அதிசயமாக ஆர்யா அவர்களை ஃபாலோ செய்வதும் கிளாசிகல் டச். சூர்யா வரும் நவரச எபிசோடும் அற்புதம்.
உற்சாகத்தை ஊற்றி வடித்திருப்பார் போலிருக்கிறது ஆர்யாவின் கேரக்டரை. இசைக்கேற்ப பாய்ந்து வரும் முதல் காட்சியிலேயே மனதில் நச்சென்று உட்கார்ந்துவிடுகிறார். போதாதற்கு கூடவே ஒரு குண்டுப் பையன். ஆர்யாவின் லவ் ட்ராக்தான் ஒட்டாமல் குட்டிக்கரணம் போடுகிறது. பாவம் மது ஷாலினி. ஜனனிக்கு உதார் கான்ஸ்டபிள் வேடம். சட்டம் ஒழுங்கை நாமதானே காப்பாத்தணும்ணே என்று வீறாப்பாக கிளம்பும் போது விலா நோக வைக்கிறார்.

ி.எம்.குமாருக்கு அவரது உடம்பைப் போலவே வெயிட்டான கேரக்டர். கலா ரசிகராக, ஏமாந்த ஜமீன்தாராக வாழ்ந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி ஆர்கே சாட்டையால் வெட்டவெளியில் அடித்து துரத்துவது உச்சக்கட்ட வன்முறை. ‌ஜி.எம்.குமாருக்காக விஷால் ஆக்ரோஷமாக கிளம்புகையில் திரையரங்கில் எழும் கைத்தட்டல் அந்த வன்முறையின் தாக்கத்தை உணர்த்திவிடுகிறது. ‌ஜி.எம்.குமார் கண்ணாடி முன் நின்று அழுததை விஷால் நடித்துக் காட்டும் போது மற்றவர்கள் சி‌ரிக்க ஆர்யா மட்டும் அழுவதும், எம் புள்ளைக்கு ஒண்ணுன்னா அறுத்துப்புடுவேன் என்று அம்பிகா ஆர்யாவுக்காக இன்ஸ்பெக்ட‌ரிடம் சண்டையிடுவதும் அடித்தட்டு மக்களின், சண்டையை தாண்டிய அன்பை பதிவு செய்யும் நுணுக்கமான காட்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக