வியாழன், ஜூலை 28

அதிகரித்து வரும் மது அருந்தும் பழக்கம்!!!ஆண்டுதோறும் 73 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்


ஜெர்மானியர்களிடம் புகை பிடிக்கும் பழக்கம் குறைந்துள்ள நிலையில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 பேரில் ஒருவர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளனர். பழக்க வழக்கங்களில் அடிமையாதல் குறித்து ஜெர்மன் மையம் 2011ம் ஆண்டிற்கான அறிக்கையை நேற்று வெளியிட்டது. ஜெர்மனியில் 18 வயது முதல் 64 வயது வரை உள்ள நபர்களில் 5 பேரில் ஒருவருக்கு ஆல்கஹால் பழக்கம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 20-25 வயது இளைஞர்களிடம் 194% அதிகரித்திருப்பது மிக கவலைக்குரிய நிகழ்வு ஆகும். மேலும் ஆல்கஹால் தொடர்ந்து அருந்துவதால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக 3,565 வயதுக்குட்பட்ட நபர்கள் ஆண்டுதோறும் 73 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக