வியாழன், ஆகஸ்ட் 4

வைரத்தின் மீது தனி பிரியம்


தமிழ், தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால்.

இந்தியிலும் நடிக்கிறார். மும்பையில் நடந்த சர்வதேச நகை கண்காட்சிக்கு காஜல் அகர்வாலை விழாக்குழுவினர் அழைத்தனர்.

அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் விதவிதமான நகைகளை அணிந்து மேடையில் நடந்தார். 

கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதாவது:- நகை கண்காட்சியில் நகைகளை அணிந்து நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 

இதற்காக பயிற்சி எடுக்கவில்லை. சென்னையில் இருந்து வந்து இறங்கியதும் இதில் பங்கேற்றேன். நகைகளில் எனக்கு வைர நகைகளை பிடிக்கும். குறிப்பாக வைர மோதிரம் அணிய ரொம்ப ஆர்வம். 

எனக்கு வைர மோதிரம் ஒன்றை எனது தந்தை பரிசாக கொடுத்துள்ளார். அதை எப்போதும் அணிகிறேன். 

என் தந்தை பரிசாகக் கொடுத்த காரணத்தால், அந்த மோதிரத்தை எப்போதும் கழட்டாமல் அணிந்து வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக