வெள்ளி, ஆகஸ்ட் 5

புதுசா ஒன்னும் இல்லைங்க.. ஆனால் புதுசா தான் இருக்கு....


தலையங்கத்தை   பார்த்ததும் பார்க்காதமாதிரி போக போறிங்களா .புதுசா ஒன்றும் இல்லைங்க.ஆனால் புதுசாத்தான் இருக்கு ...சிரிக்க ஆனால் சிந்திக்க பல நிமிடங்கள் ...


சில தினங்களுக்கு முன் உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார் .அவர் வந்த வேளை நான் வீட்டில் இல்லை ....வேலை முடிந்து மிகுந்த களைப்புடன் வீட்டுக்கு சென்ற எனக்கு அவர் வரவு சந்தோசமாகவே அமைந்திருந்தது .என்னை கண்டதும் "" ஆ..... பிள்ளை வந்திட்டாள் அவளிட்டைத்தான் வந்தனான் ""அவருக்கு கொஞ்சம் வயதுதான் ஆனாலும் இளமை பேசும் அவரது துடி துடிப்பு .அந்த துடி துடிப்பில் அவருக்கு சிறு வருத்தம் தனக்கு கணணி சம்பந்தமான அறிவு இல்லையே என்றதுதான் ...என்னை கண்டதும் நலம் விசாரித்த உறவினர் தனது கட்டளையை விண்ணப்பித்தார் .அவர் ஓய்வு பெற்ற பின்பும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கின்றார் என்பதால் அவருக்கு எது சம்பந்தமாக என்று சொல்லுங்கள் நான் சொல்லித்தருகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினேன். இருந்தாலும் எனது கிண்டல் கேள்வியை தொடுக்க மறக்க வில்லை..(தப்ப எடுக்காதீங்க....அவரும் எடுக்கலை எப்பவும் உனக்கொரு நக்கல் என்று சிரித்து விட்டார்  )

""அதில் இல்ல பிள்ளை இவள் பேர்த்தி லண்டன் இல இருந்து கொண்டு facebook open பண்ணுங்க தாத்தா.. facebook open பண்ணுங்க தாத்தா…என்று விடுறாள் இல்லை.அது என்ன பிள்ளை அப்பிடி என்றால் .சாமம் சாமமாக நித்திரை கொள்ள விடுறாள் இல்லை அவளுக்கு நடு இரவில என்ன வேலை என்று தெரியேல்லை.கேட்டால் தோட்டம் செய்யிறன் என்று சொல்லுறாள்"" அங்க இருந்தாலும் அவளுக்கு எங்கடை  குலத்தொழிலை விடேல்லை தோட்டம் செய்யிறாள்  பிறகு என்ன  என மனதில அவருக்கு ஒரு பூரிப்பு.

அவரின் பதிலை கேட்டு நான் சிரித்து விட அவரும் ஏன் பிள்ளை நீ வைச்சு இருக்கிறியா  ?? என்று கேட்க நானும் பதிலுக்கு ஓம் என்று தலையாட்ட  ,அப்ப இனி   " நீ எண்டை நண்பி "( அடக்கடவுளே!!!! இதெல்லாம் எப்பிடி????? தானா வருதா , முடியலைட சாமி ..) இதிலை ஒரு காமடி அவரது பேர்த்தியும் நானும் ஒரே வயது என்பதுதான் .

ம்ம்ம்  ....சரி வகுப்பு ஆரம்பம் ,facebook உம் ஆரம்பம் .தாத்தாவும் இப்போது முகப்புத்தகத்தில் ..அழகிய விக்ரம் ஆக .இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க சில தினங்களுக்கு பின்னர் மறுபடியும் தாத்தாவின் வருகை .இன்முகத்துடன் தாத்தாவை  வரவேற்றேன் தேநீர் அருந்தி விட்டு நாட்டு  நடப்புக்களை  பற்றி அனைவரும் இருந்து பேசிக்கொண்டு இருந்தோம்.


அப்போதுதான் அவர் "" அவள் என்டை மூத்தவளிண்டை மகளுக்கு கலியாணம் பேசிட்டாளாம்””” பதிலுக்கு அம்மா யாராம் மாமா மாப்பிளை என்று கேட்க்கவும் உந்த facebook இலதானாம்  லவ்   ஆம்  ..அடி பிள்ளை  இங்க  பெயரும் தந்திருக்கிறாள் . உதில தான் போய் பார்க்க சொன்னவள் "" 
( அப்பிடி என்றால் முகப்புத்தக நிறுவனத்தின் உரிமையாளரின்  நண்பரா இருப்பாரோ என்று மனதில சிரித்தபடி )

கொடுங்க தாத்தா என தேடலுக்குள் சென்று தாத்தாவின் பேர்த்தி முகப்புத்தக நண்பனை ஒருவாறு தேடி அவருக்கு காட்டினேன்.அவருக்கு மட்டற்ற  மகிழ்ச்சி ""அவளுக்கு சின்ன வயதில அவன் சிவகுமார் இண்டை மகனுக்கு என்ன பெயர் பிள்ளை சூரியாவோ . அச்சு அசல் அவனை மாதிரியே .இல்லையோ என அம்மாவை கூவி அழைத்தார் தனது பேர்த்தியின் மாப்பிளையை காட்ட (ஆஹா ..தாத்தா நீங்க எங்கயோ போயிட்டிங்க ) ஐயோ  இல்லை தாத்தா . அது நீங்க சொன்ன மாதிரி சூரியா தான் .என்று சொல்லி அருகில் உள்ள மாப்பிளையின்  படத்தை காட்டினேன். தாத்தாவுக்கு அதிருப்தி ."" ஏன் பிள்ளை இவள் என்டை பேர்த்தி சூரியா படம் மட்டும் தான் பார்த்தவளோ அருகில் உள்ள படம் பார்க்கலையோ  ”” என  பேர்த்தியை   கிண்டல்  பண்ணினார். இருந்தாலும் என்ன பிள்ளை சந்தோசம்  ஆகா இருந்தால்  சரிதான்  .என்றவாறே ஆரம்பித்தனர் .எனது அம்மாவும் தாத்தாவும் .


சப்பா ......................முடியலையே , நான் இருவருக்கும் இடையில் .நீங்க இதுகள் எல்லாம் கேக்கணும் தெரிஞ்சு இருக்கணும் .இது தாத்தாவின் அன்புக்கட்டளை.


ம்ம்ம்ம்.....அந்தக்காலத்திலை கலியாணம் என்றால் அந்த நாள் வரைக்கும் என்னமாதிரி பிள்ளையையும்   மாப்பிளை யையும்  கவனமா  பார்த்து எத்தனை சாஸ்திரி வீட்டு வாசல்   போய் வரிசையில நின்று எத்தனை பேரை விசாரித்து கண்ணில எண்ணெய் விட்டுக்கொண்டு ஒரு பிள்ளையை மாப்பிளை கையில கொடுக்கும் வரைக்கும்  வீட்டில ஒருத்தருக்கும் நித்திரை வராது..எல்லாம் நல்லபடியா  நடந்து முடியனும் என்று ஏறாதா கோவில் இல்லை என்று அவரும். பதிலுக்கு இப்ப எதை சொன்னாலும்  எந்த பிள்ளையளுக்கும் விளங்காதாம் .தான் பிடிச்ச முயலுக்கு மூன்று  கால் என்று சொல் பேச்சு கேக்கிறதே இல்லை .இவள் என்டை பேர்த்தியும் உந்த facebook இலதானாம் நண்பியாம் .இப்ப என்ன என்றால் அவனைத்தான் கட்ட போறேன் என்று ஒற்றை காலில் நிக்கிறாளாம் .உவள் என்டை பிள்ளைக்கு துளியும் விருப்பம் இல்லை. இல்லை பிள்ளை தெரியாமல்த்தான் கேக்கிறேன் என்று என்னை பார்த்த  தாத்தா உந்த facebook நிறுவனம் ஏதும் திருமண சேவை நடத்துதோ.? இல்லை தெரியாமல்த்தான் கேக்கிறேன்  .எத்தினை பொருத்தம் பார்த்து செய்தாலும் எத்தனை பிரச்சனை .தெரியுமோ .உங்களுக்கு இப்ப உதுகள் எல்லாம் விளங்காது அனுபவம் தான் உங்களுக்கு எல்லாம் நல்ல பாடம் ஆக அமைய போது. ஆனால் இப்ப அந்த காலம் எல்லாம் மாறிப் போய்ச்சு .இது எல்லாம் எங்க போய் முடியப்போதோ? என தத்தா மிகுந்த வேதனையுடன் சலித்துக்கொண்டார்  தனது பேர்த்தியின் வாழ்க்கையை நினைத்து. (டயருக்குள்  காற்றை போல நான் எல்லோ மாட்டிக்கொண்டேன்    )

தன் பேர்த்தியின் வாழ்க்கை எப்படி அமைய போகிறதோ என்ற வருத்தத்தில் அவர் மனதில் ஒரு நூறு கேள்விகள் .அவரின் வருத்தமும் நியாயம் ஆனதுதான் .என் மனதில்  தெளிவான ஒரு குழப்பம்.அருகில் இருந்த அம்மா மனதில் தாத்தா  , நான் ,அம்மா  என எல்லா கேள்விகளும்  ஒருங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது அம்மாவின் முகத்தை பார்த்ததுமே நான் புரிந்து கொண்டேன். அம்மாவின் சிந்தனைகளில் சிறு பயம்   தொற்றி கொள்ள எனக்கு புரிந்து விட்டது என் முகப் புத்தகத்திற்க்கு இனி  முற்றுபுள்ளி தான் என்று   .ஒருவாறு  நிழல்களையும் நியங்களையும் அம்மாவிற்க்கு  விளக்க அம்மா முகத்தில் சற்றுத்தெளிவு. (அப்பாடா தப்பிச்சேன் )

சிறிது நேரம் அமைதி காத்த அவர் என்னிடம் அவள் பேர்த்தி வந்தால் சொல்லு கவனமா பேசி அமைதியா வாழ்க்கையை கொண்டு போக சொல்லி இல்லாட்டில் இப்பிடி என்னும் ஒருத்தி வந்து facebook யும்  ஆளையும் மறைக்க மாட்டாள் என்று என நிச்சயம் .இதெல்லாம் சொல்லிக்கொண்டே.இந்த காலத்தில ஒருத்தரையும் நம்பமுடியாது .
(ஆஹா …..தாத்தாவிட்க்கு  Hacking உம்  தெரியுது )


அப்பிடியே அவளை பார்த்து நடந்து கொள்ள சொல்லு எனக்கூறி விட்டு  நேரம் ஆச்சு நான் வாறன் வீட்டை போட்டு  என்று எழுந்தார்  .பதிலுக்கு அம்மாவும் ஒன்றும் யோஷிக்காமா கவனமா போயிட்டு வாங்கோ  .இந்த காலத்து பிள்ளையள் ஏதோ அவையின்டை புத்திக்கு ஏற்ற   மாதிரி கவனமா இருக்கத்தானே வேணும் அவளுக்கும் அது எல்லாம் விளங்கும் தானே .என்று ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.தாத்தாவும் அது சரிதான் என கூறிக்கொண்டு வாசலைக் கடந்தார்.

புதுசா ஒன்றும் இல்லைங்க ஆனால் புதுசாதான் இருக்கு .தாத்தா சொன்னது சரிதான்  சாந்தி திருமண சேவை , சந்நிதியான் திருமண சேவை ,மாஹாலட்சுமி திருமண சேவை  எல்லாம் போய் இப்ப facebook திருமணசேவை என்று காலம் மாறி விட்டது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக