செவ்வாய், நவம்பர் 8

புலி வால் பிடித்த நாயர் - பிரபுதேவா

பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சேர வேண்டாம், பழைய மனைவியைப் பார்க்க வேண்டாம், பழைய வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தந்தை சுந்தரமும், புது மனைவியாகப் போகும் நயனதாராவும் கூறி வருவதால் பிள்ளைகளைக் காண முடியாவில் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளாராம் பிரபுதேவா.


புலி வால் பிடித்த நாயர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. எலியிடமிருந்து சிக்கி புலியிடம் போய் மாட்டியுள்ளார். நயனதாராவின் மீது மோகம் மறறும் காதலால் மனைவி ரமலத்தையும், பி்ள்ளைகளையும் விட்டுப் பிரிந்த பிரபுதேவா, ரமலத்தை விவாகரத்தும் செய்தார். அவர்களை செட்டில் செய்து விட்ட அவரால் உணர்வுகளையும், பாசத்தையும் செட்டில் செய்ய முடியவில்லையாம்.

சினிமாவில் போடப்படும் செட்களைப் போல தனது பழைய உறவுகளையும் கலைத்து விட்டு புது செட் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்த அவரால் அப்படிச் செய்ய முடியவில்லையாம். காரணம், பிள்ளைப் பாசம் அவரைப் பேயாய் ஆட்டுவிக்கிறதாம். பிள்ளைகளைப் பார்க்கத் துடிக்கிறாராம், ஏங்குகிறாராம். 

இதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். இதை அறிந்த நயனதார கொதித்துப் போய் கொந்தளித்து விட்டார். பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். இதனால் அதிர்ந்த பிரபுதேவா கேரளாவுக்கு ஓடினார். வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார், ஆனால் நயனதாரா திறக்கவே இல்லை. நடு ரோட்டில் நின்று அவமானத்திற்குள்ளாகி ஊர் திரும்பினார்.

ஆனால் இதை மறுத்த நயனதாரா, அப்படியெல்லாம் இல்லை, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, எங்களது திருமணத்தைப் பார்த்து ஊரே புகழும் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது வரை, பிரபுதேவா தனது பிள்ளைகளைப் பார்க்க தடையாக இருக்கிறார் என்பதே உண்மை என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

அதை விட கொடுமையாக, பிரபுதேவாவின் தந்தையும் கூட இப்போது நயனதாராவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாராம். அதுதான் அத்து விட்டாச்சே, இன்னும் என்ன பழைய வீடு, பழைய பாசம் என்று பிரபுதேவாவிடம் அனல் கக்குகிறாராம் தந்தை சுந்தரம்.

இப்படி மாற்றி மாற்றி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக