வியாழன், டிசம்பர் 8

219 ரன்கள் எடுத்து ஷேவாக் உலக சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்த 2 வீரராகவும், அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் வீரராகவும் இந்திய வீரர் ஷேவாக் சாதனை படைத்துள்ளார். ஷேவாக் 219 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.


ஷேவாக் மொத்தம் 149 பந்துகளில் 7 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் அடித்து 219 ரன்களில் அவுட்டானார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் 200 ரன்கள் என்ற சாதனை முறியடித்தார் ஷேவாக்.இந்தப் போட்டியில் இந்தியா 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாள் அரங்கில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.47 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 382 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா(25), கோஹ்லி(3) ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இலவசமாக SWEDAN சென்று வர தொடர்பு கொள்ளுங்கள் : 071 452 8054

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக