வியாழன், டிசம்பர் 22

நயன்தாரா நடித்தால் மட்டுமே, அந்தப்படத்தில் நானும் நடிப்பேன்ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு, மீண்டும் ஒரு படத்தில் சீதையாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நயன்தாரா சீதையாக நடித்தால் மட்டுமே, அந்தப்படத்தில் நானும் நடிப்பேன் என்று ஒரு ஹீரோ அடம்பிடித்து வருகிறார்.விரைவில் பிரபு‌தேவாவை கரம்பிடிக்க இருக்கும் நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த படம் ஸ்ரீ ராமராஜ்யம். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சீதை வேடத்தில் நடித்து இருந்தார் நயன்தாரா. சமீபத்தில் வெளியான இப்படம், ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக நயன்தாராவின் சீதை கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. பலரும் அவரை கூப்பிட்டு பாராட்டியதாக நயன்தாராவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா, அடுத்து ராமாயணத்தை மையப்படுத்தி, ராவணன் என்ற பெயரில் ஒரு புராண படத்தை எடுக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக நாகர்ஜூனா நடிக்கிறார். இதில் மீண்டும் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளனர். ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நயன்தாராவுக்கு, சீதை வேடம் கச்சிதமாக பொருந்தியதால் ராவணன் படத்திலும் அவரையே சீதை வேடத்துக்கு ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இயக்குநரை, நாகார்ஜூனா வலியுறுத்தி இருக்கிறார். மேலும் சீதையாக நயன்தாரா நடித்தால் தான், நான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா. இதனால் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.
ஏற்கனவே நயன்தாரா மீண்டும் படத்தில் நடிப்பேன் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி இந்தபடத்திலும் அவருடைய வேடம் சீதை என்பதால், நிச்சயமாக நயன்தாரா நடிப்பார் என்று தெலுங்கு வட்டாராத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக