புதன், ஜனவரி 4

உரசிக்கொள்ளும் இருவரும் ஒன்றிணைவார்களா?

கமலுக்கும்கே.எஸ்.ரவிக்குமாருக்கும் மன்மதன் அம்பு படத்தின் போது உரசல் ஏற்பட்டதால் தான் ரஜினியிடம் போனார் கே.எஸ்.ரவிக்குமார் என்று அப்போது பரபரப்பாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என்று நான்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளது இவர்கள் கூட்டணி. கமல் எழுதி நடித்த மன்மதன் அம்பு படத்தையும் இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார் தான். தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த இவர்கள் இணையும் ஐந்தாவது படமாக மன்மதன் அம்பு அமைந்தது. படம் படுதோல்வி அடைந்ததில் படத்தின் தயாரிப்பாளர் உட்பட படத்தின் யுனிட் அனைவரும் டென்ஷனில் இருந்தனர்.

மன்மதன் அம்பு படத்தின் தோல்வியைப் பற்றி கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்கும்போது, அது கமல் படம், என்னுடைய படம் இல்லை என்று தன் நட்பு வட்டாரத்தில் சொல்லி தப்பிக்க பார்த்தாராம். இதை அறிந்த கமல், இதற்கு முன்பு நான்கு படங்களில் இருவரும் பணியாற்றியுள்ளோம். அந்த படங்களின் வெற்றியின் போது, இது என்னுடைய வெற்றி இல்லை. கமல் படத்துக்கான வெற்றி தான் என்று அவர் சொல்லி இருக்கலாமே... என்று பதில் கொடுத்தாராம் கமல். இவை அனைத்தும் நடந்து முடிந்த கதை.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அடுத்த படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்குகிறார் என்பதே புதிய தகவல். கோச்சடையான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமார், நிறுத்திவைக்கப்பட்டுள்ள ராணா படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் துவங்கும் என அறிவித்துள்ளார்.

கமல்ஹாஸன் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ராணா முடிந்த பிறகு கே.எஸ்.ரவிகுமார் - கமல்ஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

உலகில் நடக்கும் ஊழலுக்கு எதிரான இந்த படத்தின் கதையை படித்ததும் கமல்ஹாசன் படத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளாராம். ஆனால் இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தை தழுவியதாக இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

உரசிக்கொண்ட இருவரும் ஒன்றினைவார்களா? இணைந்தால் மகிழ்ச்சியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக