வியாழன், மார்ச் 3

என் பிரியமான சிநேகிதியே .... நாம் மீண்டும் பிரிய போகிறோம்..சந்திக்காமலேயே ...



என்னுடைய வானத்தில்
என்றோ தொலைந்து போன
ஒரு நட்ச்சத்திர பூவொன்று
இன்று ரயிலின் யன்னலோரம்....

என் வாழ்க்கை பயணத்தின்
எதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
எதோ ஒரு நிறுத்தத்தில் இரங்கி போய் விட்ட
உன் எழில் முகத்தை
என் இதயத்தில் பதிந்துள்ள
உன் நட்பு முகத்தோடு ஒப்பிடு பார்க்கிறேன்....

உதடுகளோடு சேர்ந்து
கண்களும் சிரிக்கும்
அந்த ஊமைஜ்சிரிப்பு
நீ ஷந்தோஷித்திருப்பதை
நிஜ்ஜயயபடுத்துகிறது

அன்று என்னோடு
நட்பாய் சேந்து இருந்திருந்த உன் கைகளில்
இன்று காதலோடு கை கோர்த்து இருக்கும்
உன் கணவனை கண்டு களிப்படைகிறேன்

நீயே என்னை
கவனிக்காமல் போனாலும்
உன் குஞ்சு குழந்தை
என்னை பார்த்து
நட்பாய் சிரிக்கிறது
ஓ உன் ரத்தம் அல்லவா ....

தட தடத்து ஓடிக்கொண்டு இருக்கும்
ரயிலின் சத்தத்தையும் தாண்டி
உன் உதடுகள் அன்று
உச்சரித்த அந்த நட்பின் வார்த்தைகள் என்னுள்ளே
ஒலித்து கொண்டே இருக்கிருக்கின்றன ......

ஜன்னல் காற்று
உன் கூந்தல் கலைத்து
என்னுள்ளே சங்கமிக்கும் போது
நம் நட்பின் அழகிய அந்த பழைய வாசனையை
சுவாசிகின்றேன்.........

என் பிரியமான சிநேகிதியே ...

இதோ ரயில் நிக்க போகிறது
நான் இறங்க போகிறேன்
நாம் மீண்டும் பிரிய போகிறோம்
சந்திக்காமலேயே .....

போய் வருகிறேன்
என்றோ ஒருநாள் மீண்டும்
எங்காவது சந்திப்போம்
என்ற சந்தோசத்தோடும்
உன் நினைவுகள்
ஏற்றி வைத்த உன் நட்பு சுமையோடும்
இறங்க போன எனக்கு
உன் குழந்தை சிரித்து கொண்டே பறக்கவிட்டது முத்தத்தை ...
நெஞ்யில் நிரப்பி கொண்டு
அதே பழைய நட்பின் நினைவுகளை சுமந்து
இறங்கி போகிறேன் .

8 கருத்துகள்:

  1. ////உன் குழந்தை சிரித்து கொண்டே பறக்கவிட்டது முத்தத்தை ...
    நெஞ்சியில் நிரப்பி கொண்டு////

    அடி மனதை தொட்டுச் செல்கிறது..

    பதிலளிநீக்கு
  2. "அன்று என்னோடு
    நட்பாய் சேர்ந்து இருந்திருந்த உன் கைகளில்
    இன்று காதலோடு கை கோர்த்து இருக்கும்
    உன் கணவனை கண்டு களிப்படைகிறேன்"

    அருமை.என் தோழியின் நினைவுகளை மீட்டிவிட்டீர்கள்...........

    பதிலளிநீக்கு
  3. அழகான கவிதை. உங்கள் ப்லாக் follow பண்றேன். பதிவுலகில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரம், நினைவு மீட்டலாய் அமைந்துள்ள கவிதை அருகை. மனதின் பிரிவுகளுக்குள் கொடியது, வார்த்தைகளை மௌனங்களாக்கி, பேசாது பார்வைகளைப் பரிமாறியபடி பிரிந்து செல்வது. அப் பிரிவின் துயரத்தினை கவிதையில் உரைத்துள்ளீர்கள். அருமை,


    //உதடுகளோடு சேர்ந்து
    கண்களும் சிரிக்கும்
    அந்த ஊமைஜ்சிரிப்பு
    நீ ஷந்தோஷித்திருப்பதை
    நிஜ்ஜயயபடுத்துகிறது//

    இவ் வரிகளிலுள்ள தவறுகளை நீக்கியிருந்தால் கவிதை இன்னும் செழுமை பெறும்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி ..சகோதரம் மதி அவர்களுக்கு ..

    பதிலளிநீக்கு
  6. சகோதரம் சித்தாரா அவர்களுக்கு மிக்க நன்றி ..

    எதிர்பாரதவிதமாக உங்கள் இனிமையான நாட்களையும் மீட்டியத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன் ..

    பதிலளிநீக்கு
  7. சகோதரி சித்ரா ...தங்கள் வருகையை நான் என்றும் வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. மிகவும் நன்றி நிருபன் ...

    ம்ம்ம் இனி வரும் நாட்க்களில் என் எழுத்து பிழைகளை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பேன் ...தங்கள் கருத்துக்களை என்றும் வரவேற்க்கிறேன் ..

    பதிலளிநீக்கு