சனி, மார்ச் 12

போட்டியை மாற்றிய தெ.ஆபிரிக்கா

இந்திய - தெ.ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நாக்பூரில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் தெ.ஆபிரிக்கா அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் திரில்லிங் வெற்றி பெற்றிருக்கிறது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.4 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ரன்களை எடுத்தது. சச்சின் 111 ரன்களையும் ஷேவாக் 73 ரன்களையும் கம்பீர் 69 ரன்களையும் எடுத்தனர்.


பதிலுக்கு களமிறங்கிய தெ.ஆபிரிக்கா அணி ஆரம்பம் முதலே நிதானமான துடுப்பாட்டத்தை வழங்கிவந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் கேப்டனுமான கிராண்ட் ஸ்மித் 16 ரன்களுடன் ஆட்டமிழந்த போதும்,  அடுத்தடுத்து களமிறங்கிய அம்லா (61), வில்லியர்ஸ் (52), கலிஸ் (69) ஓட்டங்களையும் எடுத்து தெ.ஆபிரிக்காவின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தினர்.42 ஓவர்கள் முடிவில் 238 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது தெ.ஆபிரிக்கா. எனினும் டும்னி, ப்லெஸிஸ், போதா, பீட்டர் சன் ஆகியோரின் அதிரடியான துடுப்பாட்டம் தெ.ஆபிரிக்காவினை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.

இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 13 ரன்கல் எடுக்கவிருந்தது. ஆஷஸ் நேஹ்ரா பந்துவீசினார். முதல் பந்தில் 4 அடித்த பீட்டர்சன், இரண்டாம் பந்தில் சிஸ்க் அடித்தார். 

மூன்றாவது பந்தில் 2 ரன்களும், நான்காவது பந்தில் 4 அடித்தும் தெ.ஆபிரிக்க வெற்றியை உறுதி செய்தார் அவர். 49.2 பந்துகளில் 8 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 300 ரன்களை எடுத்தது தெ.ஆபிரிக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக