புதன், மார்ச் 23

பாகிஸ்த்தான் அரையிறுதிக்கு தெரிவு!


மே.இந்தியாவுடனான காலிறுதி போட்டியில் -  பாகிஸ்த்தான் அணி அபார 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழையும் முதல் அணியாக தெரிவாகியுள்ளது.
இன்று மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்தியா அணி 43.3 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

அதிகபட்சமாக சந்திரபோல் 44 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் சயிட் அப்ரிடி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி, 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி குறித்த இலக்கை அடைந்தது.
கம்ரான் அக்மல் 47 ஓட்டங்களையும் மொஹ்மட் ஹஃபாஷ் 61 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அடுத்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுமாயின் பாகிஸ்த்தானுடன் அரையிறுதியில் மோதும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலக கிண்ண போட்டிகளில் பல்வேறு ஆச்சரியங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவந்தன.
குழு பீ பிரிவில், ஓர் அதிசய ஒற்றுமை இடம்பெற்றது.

இந்தியா - பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. பங்களாதேஷ் - அயர்லாந்தை தோற்கடித்திருந்தது. அயர்லாந்து - இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. இங்கிலாந்து - தென்னாபிரிக்காவை சாய்த்தது. தெ.ஆபிரிக்கா - இந்தியாவை வீழ்த்தியது. ம்த்தத்தில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒவ்வொரு அணிகளுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தன. 

இதேவேளை, முதல் சுற்றுப்போட்டிகளில் இரு பிரிவுகளிலும் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் தோல்வி கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவதாக ஆடி 329 ரன்களை விரட்டிப்பிடித்து, அயர்லாந்து வெற்றி பெற்ற நிகழ்வு, உலக கிண்ண வரலாற்றில் பொரு அணி சேஸ் செய்த மிக கூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

மேலும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 678 ரன்கள் குவிக்கப்பட்ட நிகழ்வு, உலக கிண்ண வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும், சாதனை படைத்துள்ளது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அதிக பட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை இந்தியாவின் விரேந்தர் ஷேவாக் (171) பெற்றுக்கொண்டார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக