வியாழன், மார்ச் 24

சேவாக் போன்ற வீரர்களுக்கு பந்து வீசுவது சவாலான விஷயம்


இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்கை வீழ்த்த புதிய திட்டம் தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சேவாக் போன்ற வீரர்களுக்கு பந்து வீசுவது சவாலான விஷயம். உடலை குறிவைத்து வீசப்படும் ஷாட்பிட்ச் பந்துவீச்சில் அவர் திணறுவார் என்பதால் அந்த வகையான பந்துகளை கையாள திட்டமிட்டுள்ளோம்.
அவரை விரைவிலேயே ஆட்டமிழக்க செய்து விட்டால் எங்களுக்கு சிறப்பாக இருக்கும். சேவாக்கை குறிவைத்து பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறோம். அவை அனைத்தும் சரியான முறையில் கைகொடுத்தால் ஆட்டம் எங்கள் கையில் இருக்கும்.
சேவாக் மட்டுமல்லாது இந்திய அணியின் பேட்டிங் நீண்டவரிசையாக உள்ளது. சச்சின், காம்பீர், கோலி, யுவராஜ் என எல்லோருமே மிரட்டக்கூடியவர்கள் தான். எனினும் பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளோம்.
140 கி.மீ வேகத்தில் கூட பந்து வீசுவோம். 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி விட்டால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 கருத்து:

 1. இன்று பார்ப்போமே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
  இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

  பதிலளிநீக்கு