புதன், மார்ச் 16

ஆசை

விடுமுறை என்றால் த்ரிஷாவின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. பார்ட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது நண்பர்களுடன் கேம்ப் என விதவிதமாக அனுபவிப்பது அவரது வழக்கம்.
இந்த முறை ஒரு மாறுதலுக்காக புலிகள் உலவும் ஜெய்ப்பூர் காடுகளுக்கு ஒரு விசிட் அடித்த அம்மணி, நடுக்காட்டில் 7 நட்சத்திர குடிலில் தங்கி விடிய விடிய தோழிகளுடன் த்ரில் அனுபவித்தாராம்.

அங்கிருந்த விதம் விதமான விலங்குகளையும் பறவைகளையும் பார்த்து ரசித்தாராம். தனது இரு நெருங்கிய தோழிகளை மட்டும் இந்த ட்ரிப்பில் அழைத்துப் போயுள்ளார் த்ரிஷா.

மூவரும் ஜெய்ப்பூர் அருகே உள்ள ரத்னாம்பூர் வனவிலங்கு சரணாலயத்துக்குச் சென்று, இயற்கையை ரசித்தனராம். ஆனால் த்ரிஷாவுக்கு ஒரு ஆசை... நடுக்காட்டில் உலவும் மெகா சைஸ் புலிகளைப் பார்க்க வேண்டுமாம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக