சனி, மார்ச் 19

பாகிஸ்தானின் அதிரடி ஆட்டத்தால் துவண்ட அவுஸ்த்ரேலியா ...

பாகிஸ்த்தானுடனான இன்றைய உலக கிண்ண கோப்பை போட்டியில்ஆஸ்திரேலிய அணி 176ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது . கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் தொடங்கிய இப்போட்டி, வழமை போல பந்துவீச்சாளர்களுக்கு சாகமாகவே அமைந்து போயுள்ளது.

ஆஸி துடுப்பாட்டத்தில் ஹடின் அதிகபட்சமாக 42 ரன்களை எடுத்தார். உமர் குல் 3 விக்கெட்டுக்களையும் அப்துர் ரசாக் 2 விக்கெட்டுக்களையும்  எடுத்தனர்.  இறுதியில் 46.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 176 ரன்களையே அவ் அணி பெற்றுக்கொண்டது.
இப்போட்டி தொடங்கப்பட்ட போது 25 ஓவர்கள் முடிவில் 95/3 என ரன்ஸ்கோர் இருந்தது, ஆஸியின் உலக கோப்பை மிக மோசமான சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
பதிலுக்கு துடுப்பு எடுத்தாடிய பாகிஸ்தான் அணி 41ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று  வெற்றியை தனதாக்கி கொண்டது .இதன் மூலம் குழு A யில் அது 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

1 கருத்து:

  1. போற போக்க பார்த்தா பைனல்ல பாகிஸ்தான் வந்திரும் போல இருக்கே...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு