வியாழன், மார்ச் 10

தோங்காய் பால் கேக்




தேவையான பொருட்கள்:

ஒரு முற்றிய தேங்காயின் பால் - 1 லிட்டர்

சக்கரை பொடீத்தது - 500 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

அமோனியம் பை கார்பனெட் - 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

திராட்சை - 100 கிராம்

முந்திரிப் பருப்பு - 100 கிராம்

பால் எடுத்த தேங்காய்ப்பூ

செய்முறை:
தேங்காயைத் துருவி பாலை எடுத்துவிட்டு, பூவை உலர வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால், நெய், சக்கரைப் பவுடர், ஏலப்பொடி, திராட்சை, முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் எல்லாம் போட்டு கிளறிவிட்டுக் காய்ச்ச வேண்டும். இட்லி மாவுப் பதம் வந்ததும் அம்மோனியம் பைகார்பனேட்டையும் போட்டுக் கிளற வேண்டும். பின் தகர ட்ரேயில் டால்டாவைத் தடவி, அதில் ஊற்றி விட வேண்டும். ஆறிய பின் தேங்காய்ப்பால் கேக் தயார்.

3 கருத்துகள்:

  1. //அமோனியம் பை கார்பனெட்//என்னங்க இது. சமையல் பதிவுன்னு வந்த கெமிஸ்ட்ரி லேப் விஷயங்கள் எல்லாம் சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  2. ஆம் நன்றி ...தங்கள் கேள்விகளுக்கு நன்றி ..
    இது கேக் இன் பதமும் சுவையும் பெறப்பட மேலும் சேர்க்கப்படும் ஒரு வகை வனிலா போன்ற ஒன்று..
    மீண்டும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் ...

    பதிலளிநீக்கு