சனி, ஏப்ரல் 2

இலங்கையை வீழ்த்தியது இந்தியா


10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை வெற்றுள்ளது.

இன்று மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2  ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மலிங்கா பந்து வீச்சில் வீரேந்திர சேவக் ஓட்டம் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். சச்சின் 18 ஓட்டங்கள் எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். சேவாக், சச்சின் இருவரும் ஆட்டமிழந்த போது இந்திய பார்வையாளர்களுக்கும், ஆட்ட நாயகர்களும் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை இழந்து துவண்டு போயிருந்தனர்.
இருப்பினும் சிறப்பாக விளையாடிய கம்பீர் 97 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தபோது டோனியின் முகத்தில் அவநம்பிக்கையை உருவான போதிலும், மனதை தளரவிட்ட போதிலும் டோனி அரைசதம் அடித்தனர். விராட் கோலி தன் பங்கிற்கு 35 ரன்கள் சேர்த்தார்.
கப்டன் தோனி 42 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் ‌போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த பெருமையை பெற்றார்.
10 ஆவது தடவையாக நடைபெற்ற இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.


1 கருத்து: