திங்கள், மே 16

எனக்கு சினிமாவில் நிறைய சாதிக்கணும் ...""ஏதாச்சும் புதுசா சொல்லுங்க மேடம் ""


சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா.


தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர். மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். 

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதாநாயகிகள் சீக்கிரமே மறைந்து போய் விடுகின்றனர்.
நடிகர்கள்தான் நீண்ட நாள் நிலைத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். 

அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கி போகிறது. சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். 

ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. சிலர் காதலுக்காக உயிரை விடுகின்றனர். இதுபோன்ற செயல்கள் என்னை மிகவும் வருத்தப்பட வைத்திருக்கின்றது. 

எனக்கு காதலில் ஈடுபாடு கிடையாது, சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே எனக்கு ஆசை மற்றும் கனவாக இருக்கிறது.

1 கருத்து:

  1. நேதாஜிமே 16, 2011

    பாவனாவின் சாதிக்கணும் என்ற வெறி பாராட்டதக்கது.
    இருந்தும் சமீப காலமாக இவரை காணவில்லை.

    பதிலளிநீக்கு