திங்கள், மே 16

"உண்மைகளின் அம்பலம் " புகைப்பழக்கத்தால் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 


அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர். ரஜினிக்கு ரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்தால் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. 

இரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறார்கள். 

புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது. 

இந்நிலையில், ராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர், ‘’ ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க “பேஸ்மேக்கர்” கருவி பொருத்துவது அவசியம்’’ என்றார். 

ரஜினியின் உறவினர் ஒருவர், ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். 

இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

2 கருத்துகள்:

 1. எங்கே இருந்துதான் செய்திகள் கிடைக்கிறதோ தங்களுக்கு போங்க !??/

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் இருப்பது கொழும்பு என்றாலும்
  நீங்கள்தான் மிகச் சரியான தகவலைச்
  சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
  (தமிழ் நாடு முழுவதும் வதந்தி இன்று
  தீயாய் இருந்தது)

  பதிலளிநீக்கு