புதன், மே 11

அவங்க மனசு கோணாம பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டாராம் சூப்பர் ஸ்டார்ராணா படப்பிடிப்புக்காக சென்னை வந்த தீபிகா படுகோனேவுக்கு செம கவனிப்பு.
அவங்க மனசு கோணாம பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டாராம் சூப்பர் ஸ்டார்.

அவர் எந்த ஹொட்டலில் வேண்டுமானாலும் தங்கட்டும் என்று சென்னையில் புகழ்பெற்ற மூன்று ஹொட்டல்களில் ரூம் போட்டிருந்தார்களாம். படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல பென்ஸ் கார் தயாராக நின்றது வாசலில். இதையெல்லாம் கவனித்து உணர்ந்த தீபிகாவுக்கு மனசு நிறைந்தது. அப்படியே வயிறையும் நிறைய வைத்தார் ரஜினி மகள் சவுந்தர்யா.
ஹொட்டல் சாப்பாடு வேண்டுமென்றால் ஓ.கே. இல்லையென்றால் என் வீட்டிலிருந்து சாப்பாடு வரும் என்று சொன்னதோடு நில்லாமல் தினமும் மூன்று வேளையும் அனுப்பி வைத்தாராம். விதவிதமான தென்னிந்திய ஸ்டைல் சாப்பாடு சென்னையையும் சவுந்தர்யாவையும் மறக்கவே விடாது தீபிகாவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக