வெள்ளி, ஜூலை 15

கலக்கத்தில் நயன்


சினிமா வட்டாரத்தில் பிரபுதேவா நயன்தாரா காதல் விவகாரம் பல சர்ச்சைகளை கிளப்பியது. தன் கணவர் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று லதா பிரபுதேவா சட்டரீதியாக போராடி வந்தார். பல விஷயங்களுக்கு பிறகு லதாவும் பிரபுதேவாவும் மனம் ஒத்து பிரிந்தனர்.

இவர்களுக்கு இடையே விவகாரத்து வழங்கி சென்னை முதண்மை குடும்ப நல அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரமலத் என்கிற லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, சமீப காலத்தில் நயன்தாராவை காதலித்து வருகிறார்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். குடும்ப சூழலை நினைத்து அழ வேண்டியவர் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி லதா தான். ஆனால் ஒரு ஆச்சரியம். இங்கே நீதிமன்றத்தில் பிரபுதேவாவை சந்தித்த லதா சிரித்து பேசினார். அங்கே தன் இறுதி நாள் படபிடிப்பில் நயன்தாரா அழுது கொண்டிருந்தார்! திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்பது பிரபுதேவா கண்டிஷன்.

அதனால் தான் நயன்தாரா படக்குழுவினரிடம் ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார். தன்னுடன் பழகி வந்த படக்குழுவினருக்கு விருந்து வைத்தாராம். திருமணத்திற்கு பிறகு பிரபுதேவா - நயன்தாரா மும்பையில் வசிப்பார்கள் என கூறப்படுகிறது. திருமண விஷயத்தில் மீண்டும் ஒரு கண்டிஷன் போட்டிருகிறார் பிரபுதேவா.

நயன்தாரா கிறித்துவர் என்பதல் கிறித்துவ முறைபடி தான் திருமணம் நடக்க வேண்டும் என்று அவர் பெற்றோர் கூறி உள்ளனர். ஆனால் பிரபு தேவா கிறித்துவராக மதம் மாறினால்தான் தேவாலயத்தில் முறைப்படி திருமணம் நடைபெறும்.

ஏற்கெனவே நயன்தாராவுக்காக லதாவை விவாகதரத்து செய்ததால் பிரபு தேவாவின் குடும்பத்தினர் அவர் மேல் அதிருப்தி கொண்டுள்ளனர். இன்னும் அவர் மதம் மாறினால் அவர்கள் ஏதாவது நினைக்கக் கூடும் என்று பிரபுதேவா தயங்குகிறார். மதம் மாற முடியாது என்றும் அவர் நயனிடன் சொல்லியிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக