ஞாயிறு, அக்டோபர் 16

‘தல’ய திரும்பிப் பார்க்க வைத்த சகோதரர்கள்!


போட்டி நிறைந்த சினிமாவுலகம் இது. இங்கு முன்னேறும் நடிகர்களை பார்த்து யாரும் வயிறு எரியா விட்டாலும், யார் முன்னேறினாலும் அந்த வேகத்தை சற்று கிலியோடு கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த செய்தி துணுக்கு ஒன்று முன்னணி நடிகரான அஜித்தையே துணுக்குற வைத்ததாக கிசுகிசுக்கிறார்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.

இதென்ன புதுக்கதை அந்த ஆங்கில பத்திரிகையில் வந்த துணுக்கு செய்தியில் இப்படி கூறப்பட்டிருந்தது. சூர்யாவின் சம்பளம் பதினைந்து கோடியும் ப்ளஸ் தெலுங்கு ரைட்சும்.

கார்த்தியின் சம்பளம் பத்து கோடியும் ப்ளஸ் தெலுங்கு ரைட்சும். ஆனால் அஜித்தின் சம்பளம் பதினைந்து கோடி மட்டும்தான் என்று. இதில்தான் துணுக்குற்றாராம் தல.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறவர் அவர். மாலை நேர பார்ட்டிகளுக்கு போகிற பழக்கம் இருந்தால் இதுபற்றியெல்லாம் அங்கு கேள்விப்பட்டிருக்கலாம்.

அந்த பழக்கம்தான் அவருக்கு இல்லையே இந்த செய்தியை படித்ததும், தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவரிடம், இப்படி செய்தி வந்திருக்கே, நிஜமா என்றாராம். அதற்கு தயாரிப்பாளர் என்ன பதில் சொன்னாரோ, அடுத்த வினாடியே தன் வேலைகளில் மூழ்கிவிட்டாராம் அஜித்.
இந்த பிரதர்ஸோட வளர்ச்சி…. வளர்ந்த ‘தல’க்கே பிரமிப்பாத்தான் இருக்கும்…..

3 கருத்துகள்:

  1. சூர்யா வளர்ந்து எங்கேயோ சென்று கொண்டு இருக்கிறார். அஜித் அல்ல ரஜினி கூட சூர்யா முன் நிற்க இயலாது. முதலில் இங்கே இருக்கும் "பஞ்ச் டயலாக் ஹீரோக்கள்" கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும். வரையறையை விட்டு வெளியே வரட்டும். அதன் பின் அவன் இவ்வளவு வாங்குறான். இவன் இவ்வளவு வாங்குறான் என்பதை பார்க்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. @ MANASAALI அஜித் அல்ல ரஜினி கூட சூர்யா முன் நிற்க இயலாது AVALAVU KETA NARTHAM ADIKUMA ENNA. MOTHAMAY 25 PADAM ATHALAYUM PERIYA DIRECTOR KITTA 3 PADAM 4 PADAM EPPADI PATA MANAM KETTA PAIYANA ENGA SERTHU PESRA.......

    BLOG IRUKU ENDRU EPPADI ONA EYATHA KUTATHU,
    ATHU EPPADI ORU 3 PADAM HIT KODUTHU, ALU KONJAM AZHAGA IRUNTHA AVAR RASIGAR AVARINGA.....

    பதிலளிநீக்கு