செவ்வாய், அக்டோபர் 18

அசத்த போவது யாரு ?

இந்த தீபாவளிக்கு குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில் கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான். 


விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள். 

அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.

சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக