வியாழன், நவம்பர் 3

சிகரட் விலையை 30 ரூபாவாக அதிகரிப்பு


சிகரட் ஒன்றின் விலையை 30 ரூபாவாக அதிகரிக்குமாறு மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சிகரட் விலையை அதிகரிப்பதன் ஊடாக சிகரட் பாவனை குறைவடைகின்றது. எனினும் விலையினை அதிகரிப்பதன் ஊடாக அரசாங்கத்துக்கு 16 பில்லியன் ரூபா வரையில் வரி வருமானம் கிட்டவிருப்பதாகவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இதற்கு முன்னர் சிகரட்டின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் குறைவடைந்திருப்பதாக மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரத்துக்கு முன்பதாக 20 ரூபாவாக விற்கப்பட்ட சிகரட் ஒன்றின் விலை 1 முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்விலையை 50 சதவீதத்தால் அதிகரித்து சிகரட் ஒன்றின் விலையை 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். 

சிகரட்டின் பாவனையாளர்களின் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் அதன் விலையிலும் அதிகரிப்பும் செய்யப்பட வேண்டும். எனினும் அவ்வாறு விலைகள் அதிகரிக்கப்படுவதில்லைஎன்றும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, புகைத்தல் பொருட்களின் மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் 725 பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு வரி வருமானமாக கிடைக்கப் பெற்றிருப்பதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

நன்றி - வீரகேசரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக